இந்தியா-பாக் போர் பதற்றம்: ஆறு அப்பாச்சி வானூர்திகளை பாக் எல்லையில் நிலைநிறுத்த இராணுவம் முடிவு

இந்தியா-பாக் போர் பதற்றம்: ஆறு அப்பாச்சி வானூர்திகளை பாக் எல்லையில் நிலைநிறுத்த இராணுவம் முடிவு

கடந்த சனியன்று செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை உறுதி செய்துள்ள இராணுவ தளபதி பாக்எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு உதவும் வண்ணம் இந்த ஆறு அப்பாச்சி தாக்கும் வானூர்திகளும் நிறுத்தப்படும் என தளபதி தெரிவித்துள்ளார்.

எதிரிகளின் கவச வாகன படைகளால் ஆபத்து நேரலாம் எனும் பகுதிகளில் இந்த அப்பாச்சி நிலைநிறுத்தப்படும்.

மேற்கு எல்லையில் நடைபெறும் ஆயுத இடமாற்றம்/குவிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தளபதி இராணுவம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தேவைக்கும் அதிகமாக தயாராகி விட்டது என கூறியுள்ளது.

பராளுமன்ற ஒப்புதல் இருந்தால் போதும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நடவடிக்கை எடுப்போம் என தளபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கிய நோக்கம் எல்லையில் அமைதியை நிலைநிறுத்துவது தான்.ஆனால் இருபுறமும் இருந்து அச்சுறுத்தல் உள்ளதால் இரு பக்கமும் கவனம் செலுத்துகிறோம் என தளபதி கூறியுள்ளார்.

வடக்கு (சீனா எல்லை) எல்லையில் சாலைகள்,கட்டமைப்புகள்,ஆயுத சேமிப்பு கிடங்குகள் மற்றும் படைகள் விரைவில் எல்லைக்கு நகர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

தளபதியின் சியாச்சின் விசிட் குறித்து பேசிய அவர் இங்கு தான நம் எதிரிகள் இருவருடைய ஆபத்து ஒரு சேர இருக்கிறது.இதன தவிர சாக்சம் பள்ளத்தாக்கிலும் கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.