தஞ்சாவூரில் முதல் சுகாய் ஸ்குவாட்ரான்-இந்திய பெருங்கடலில் கண்காணிப்பை அதிகப்படுத்த முடிவு

தஞ்சாவூரில் முதல் சுகாய் ஸ்குவாட்ரான்-இந்திய பெருங்கடலில் கண்காணிப்பை அதிகப்படுத்த முடிவு

222வது ஸ்குவாட்ரானை தஞ்சாவூரில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்னனி தாக்கும் ஸ்குவாட்ரானை தென் இந்தியாவில் நிலை நிறுத்துவது இது இரண்டாவது முறையாகும்.

கோயம்புத்தூரின் சூலூரில் 45வது ஸ்குவாட்ரான் பிளையிங் டேக்கர்ஸ் தேஜஸ் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் இந்த புதிய ஸ்குவாட்ரான் அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கும்.

கடந்த 2013 மே மாதம்  27ம் தேதி தஞ்சாவூர் தளம் தொடங்கப்பட்டது.திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தெற்கு வான் கட்டளையகத்தின் கீழ் செயல்படும் இந்த தஞ்சாவூர் தளம் வான் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்டது.

கடற்பகுதி பாதுகாப்பிற்காகவும் இந்த தளம் செயல்படும்.முன்னதாக முதன் முதலாக பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட இந்த தளம் எதிரி போர்க்கப்பல்களுக்கு எதிராக செயல்படும் அளவிற்கு இருந்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணையுடன் எதிர்காலத்தில் சுகாய் தஞ்சாவூரில் நிலைநிறுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published.