விஐபி பாதுகாப்பு பணிகளில் இருந்து என்எஸ்ஜி படை விலகல்;மத்திய அரசு அறிவிப்பு
நாட்டின் முக்கிய விஐபிகளுக்கு பாதுகாப்பு பணிகளில் தேசியப் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது.இனி இதுபோன்ற பணிகள் என்எஸ்ஜிக்கு வழங்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட இருபத ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.1984 கலவரத்திற்கு பிறகு தேசியப்பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.தனிநபர் பாதுகாப்புக்காக இந்த படை உருவாக்கப்படவில்லை.
இந்தியாவிலேயே அதிநவீன ஆயுதங்கள் பெற்ற படைகளுள் ஒன்றாக திகழும் என்எஸ்ஜி தற்போது 13 முக்கிய நபர்களுக்கு Z Plus பாதுகாப்பு வழங்கி வருகிறது.இதற்கென 24 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் உபி முதல்வர் ஆகியோருக்கான NSG பாதுகாப்பு நீக்கப்படும்.இனி இவர்களை பாராமிலிட்டரி வீரர்கள் பாதுகாப்பார்கள்.
முன்னாள் முதல்வர் மாயாவதி,முலாயம் சிங் யாதவ்,சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல்,பரூக் அப்துல்லா ஆகியோருக்கு NSG பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் அஸ்ஸாம் முதல்வர் சர்பனந்தா சோனோவால்,அத்வானி ஆகியோருக்கும் NSG பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
NSG உருவாக்கப்பட்டதின் முதல் நோக்கம் பயங்கரவாத எதிர்ப்பு தான்.முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்எஸ்ஜிக்கு ஒரு தேவையில்லாத பணிதான்.இதை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இந்த முடிவுக்கு பிறகு கிட்டத்தட்ட 450 Black cat commandos விஐபி பாதுகாப்பு பணியில் இருந்து விடுபட்டு இனி தனது தாய் இயக்கமான NSG-யில் தனது பணிகளை தொடருவர்.
இனி முக்கிய நபர்களை பாதுகாக்கும் பொறுப்பு CISF மற்றும் CRPF போன்ற படைகள் கவனித்து கொள்ளும்.இந்தப் படைகள் ஏற்கனவே 130 முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களுக்கு
CISF தான் பாதுகாப்பு வழங்கி வருகிறது.