
இந்தியாவின் உற்ற நண்பனா இரஷ்யா ? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரே தளவாடங்கள்
ஏற்றுமதி
இந்தியாவின் உற்ற தோழனாக இரஷ்யா பார்க்கப்படுகிறது.அனைத்து காலநிலை நண்பன் என போற்றப்படுகிறது இரஷ்யா.
இந்தியாவும் இரஷ்யாவிடம் இருந்து வருடந்தோறும் பல பில்லியன் டாலர்கள் செலவில் ஆயுதங்களை வாங்கி குவித்துவருகிறது.விக்ரமாதித்யா,டி 90 கவச வாகனங்கள், தல்வார் ரக போர்க்கப்பல்கள்,சுகாய் விமானங்கள் என முப்படைகளிலும் இரஷ்ய தளவாடங்களை வாங்கி இணைத்துள்ளோம்.
இது தவிர சுகாய் ,டி90 போல தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்தியாவிலும் தயாரிக்கிறோம்.இதுவும் தவிர இருநாடுகளும் இணைந்து தொழில்நுட்ப மேம்பாடு செய்கின்றன.அதில் குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணை ஒரு இணைந்த சிறந்த தயாரிப்பாக உள்ளது.
ஆனால் இரஷ்யா இந்தியாவிற்கு மட்டுமே இந்த தளவாடங்களை விற்கிறதா ? வரலாறு இல்லை என்று தான் கூறுகிறது.இந்தியாவிற்கு விற்ற அதே அதிநவீன தளவாடங்களை சீனாவிற்கும் இரஷ்யா விற்கிறது.அவற்றுள் சிலவற்றை காணலாம்.
S400 வான் பாதுகாப்பு அமைப்பு :
எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பு என்பது 350கிமீ வரை வரும் எதிரி ஏவுகணை,விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே சுட்டு வீழ்த்தக்கூடிய நவீன அமைப்பு ஆகும்..இந்த அமைப்பை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இரஷ்யா விற்றுள்ளது.
சீனா ஆறு பேட்டரிகளும் இந்தியா ஐந்து பேட்டரிகளும் வாங்கியுள்ளது.
2. Su-30 series
இந்திய விமானப்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் சுகாய் 30 விமான ரகத்தை சீனாவிற்கும் ஏற்றுமதி செய்துள்ளது இரஷ்யா.கிட்டத்தட்ட 76 சுகாய் எம்கேகே ரக விமானத்தை சீனா இயக்கி வரும் வேளையில் இந்தியா 270க்கும் அதிகமாக சு-30எம்கேஐ விமானங்களை இயக்கி வருகிறது.
3. Kilo class boats
கிலோ ரக நீர்மூழ்கிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.ஆம் இந்தியா மற்றும் சீன கடற்படைகள் இரண்டுமே கிலோ ரக நீர்மூழ்கிகளை இயக்கி வருகிறது.
சீனா 12 கப்பல்களை இயக்கி வரும் நிலையில் இந்தியா 8 இயக்கி வருகிறது.