பாக்கில் உள்ள பயங்கரவாத முகாம்களை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- தளபதி நரவனே
இந்திய இராணுவத்தின் புதிய தளபதி முகுந்த் நரவனே அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.கடந்த விழயான் அன்று அவர் பேசுகையில் பாக்கில் பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயங்கரவாத ஏவு தளங்கள் மற்றும் அதுசார் கட்டுமானங்கள்
தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த பயங்கரவாத முகாம்களை இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத ஊடுருவல் என்பது புதிதல்ல.நமது படைகள் ஊடுருவல் தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கி வருகிறது எனவும் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மேலும்ஒரு புல்வாமா தாங்குதலை நடத்தினால் மீண்டும் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்படும் என தளபதி தெரிவித்துள்ளார்.
எந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தாக்குதல் நடந்த பிறகு தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.
எல்லையில் வேலிகள் எடுக்கப்பட்டு வருவதாக பாக் அமைச்சரின் கருத்தை மறுத்துள்ள தளபதி தனது சொந்த மக்களை பிரச்சனைகளில் இருந்து விலக்க இது போல போலி கருத்துக்களை பரப்புவதாக தெரிவித்துள்ளார்.