வெடிபொருள்கள் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது ; பட்ஜெட்டை நம்பி எங்கள் தயார்நிலை இல்லை – தளபதி அதிரடி பேச்சு

வெடிபொருள்கள் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது ; பட்ஜெட்டை நம்பி எங்கள் தயார்நிலை இல்லை – தளபதி அதிரடி பேச்சு

பல்வேறு ரக வெடிபொருள்கள் சேமிப்பில் இருந்த குறைபாடுகள்
( ammunition shortage ) கடந்த இரு வருடங்களாக வெடிபொருள்கள் வாங்கியதன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என தளபதி தெரிவித்துள்ளார்.தற்போது வெடிபொருள் குறைபாடு இல்லை என தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.

ரிசவர் தற்போது முழுமையாக உள்ளது.ஸ்டாக் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது.கடந்தகாலத்தில் இருந்த குறைபாடுகள் அகற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குறைபாடுகளை தவிர்க்க கடந்த காலத்தில் 30000 கோடிகள் செலவு செய்யப்பட்டு முக்கிய குறைபாடுகள் அகற்றப்பட்டு இராணுவத்தின் firepower அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016 உரி தாக்குதலுக்கு பிறகு இராணுவத்தின் வெடிபொருள் சேமிப்பு என்பது மிக மோசமான நிலையில் இருந்தது.இதனால் உசார் அடைந்த இராணுவம் வெடிபொருள் சேமிப்பை அதிகரிக்க தொடங்கியது.அப்போது பத்து நாட்கள் போரிடகூட இராணுவத்திடம் தேவையான வெடிபொருள்கள் இல்லாமல் இருந்தது.இது அப்போது நாடு முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் தற்போது இது மாறியுள்ளது.அப்போதிலிருந்து டேங்க் மற்றும் ஆர்டில்லரி ஷெல்கள் வாங்கப்பட்டன.

அவசர தேவையாக வெடிபொருள்கள் வாங்க துணை தளபதிகளுக்கு அப்போது சிறப்பு அனுமதிகள் வழங்கியது அரசு.தளவாடங்கள் வாங்க தாமதம் ஏற்படும் என்பதால் இந்த சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது.

பட்ஜெட் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.நாங்கள் எப்போதும்  ஆபரேசன்களுக்கு தயாராகவே இருக்கிறோம் என தளபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.