
பிரேசிலின் டாரஸ் அர்மஸ் நிறுவனமும் இந்தியாவின் ஜிந்தால் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் ஆயுதங்கள் தயாரிக்க திட்டம்
Jindal Defence மற்றும் பிரேசிலின் Taurus Armas ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் துப்பாக்கிகள் தயாரிக்க உள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பிசினஸ் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் சிறிய ரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட உள்ளன.இரு நிறுவனங்களும் இணைந்து ஹரியானாவின் ஹிசார் என்னுமிடத்தில் நிறுவனம் தொடங்க உள்ளன.இந்த தொழில்கூடத்தில் டாரஸ் நிறுவனத்திடம் இருந்து சிறிய ரக ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்றி இந்தியாவில் ஜிந்தால் நிறுவனம் ஆயுதங்கள் தயாரிக்கும்.
இந்திய இராணுவம்,மாநில காவல் துறைகள்,துணை இராணுவம் ஆகியவற்றிற்கான ஆயுத தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
Taurus Armas S.A பிரேசிலின் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனம் ஆகும்.சிறிய ரக ஆயுதங்கள் பலவற்றை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஆயுத சப்ளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.