கடற்படைக்கு டோர்பிடோ வழங்கும் ஒப்பந்தம்-பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நிறுவனங்களிடையே போட்டி

கடற்படைக்கு டோர்பிடோ வழங்கும் ஒப்பந்தம்-பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நிறுவனங்களிடையே போட்டி

பிரான்சின் F21 மற்றும் ஜெர்மனின் BlackShark ஆகியவை இந்திய கடற்படைக்காக டோர்பிடோ வாங்கும் திட்டத்தில் இறுதி கட்டத்தில் உள்ளனர்.இவ்விரண்டில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் இந்திய கடற்படைக்குடோர்பிடோக்கள் தயாரித்து வழங்கும்.

German Atlas Elektronik மற்றும் French Naval Group ஆகிய இரு நிறுவனங்கள் தான் இறுதி ஓட்டத்தில் உள்ளன.

இந்தியாவினுடைய ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகள் மற்றும் அரிகந்த் ரக நீர்மூழ்கிகளுக்கு 100 கனஎடை
டோர்பிடோக்கள் வாங்க நீண்ட காலமான இந்த டென்டர் நடைபெற்று வருகிறது.

இந்த டென்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் ஜனவரி 17க்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என இந்தியா கூறியிருந்த நிலையில்  German Atlas Elektronik மற்றும் French Naval Group ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் உதவியுடன் இந்தியாவில் கட்டப்பட்ட ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளுக்கு இன்று வரை நவீன டோர்பிடோக்கள் இல்லை.முதல் கப்பலான கல்வாரி இணைக்கப்பட்டு நீண்ட காலங்கள் ஆகியும் இன்னும் புதிய டோர்பிடோக்கள் வாங்கப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் நிறுவனம் உடனடியாக 100 டோர்பிடோக்கள் தயாரித்து வழங்கும்.அடுத்த அடுத்த ஆர்டர்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் வழியாக செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published.