புதிதாக மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்கள் உருவாக்க உள்துறை அமைச்சம் அனுமதி
இந்திய உள்துறை அமைச்சகம் புதிதாக 2000 மத்திய தொழிலக பாதுகாப்பு படை பணியிடங்கள் உருவாக்க அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவினுடைய முக்கிய இடங்களான ஏர்போர்ட், அணுசார் கட்டமைப்புகள்,மெட்ரோ நிலையங்கள் ஆகியவற்றை பாதுகாக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயங்கி வருகிறது.
நாட்டின் 60 ஏர்போர்ட் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.இது தவிர நாட்டின் முக்கியஸ்தர்களை பாதுகாப்பதற்கென்றே Special Security Group (SSG) என்ற சிறப்பு படையும் கொண்டுள்ளது.
நாளுக்கு நாள் வேலைப் பளுக்களும் அதிகரித்து வரும் வேளையில் வீரர்களுக்கான தேவையும் உயர்கிறது.இதற்காக புதிதாக 2000 பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் மூலம் கான்ஸ்டபிள்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அடுத்த இரு வருடங்களில் புதிய இரு பட்டாலியன்களை 1000 வீரர்கள் வீதம் உருவாக்க உள்ளது சிஐஎஸ்எப் படை.
தற்போது CISF படையில் 1.8 லட்சம் வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமானங்கள் நிலையப் பாதுகாப்பும் விரைவில் CISF வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.இங்கு தற்போது பணியில் உள்ள காஷ்மீர் காவல் துறை வீரர்களுக்கு பதிலாக CISF வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
விரைவில் மேலதிக ஏர்போர்ட்டுகள் CISF வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.தவிர முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியும் வழங்கப்படும்.ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் விஐபி பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அந்த பணிகளில் சிஐஎஸ்எப் படை நியமிக்கப்படலாம்.
கிட்டத்தட்ட 12 தனியார் நிறுவனங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கி வருகிறது.மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.