அணுசக்தி வாய்ந்த கஸ்நாவி ஏவகணையை சோதனை செய்துள்ள பாக்

அணுசக்தி வாய்ந்த கஸ்நாவி ஏவகணையை சோதனை செய்துள்ள பாக்

290கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்க வல்ல இந்த அணு சக்தி வாய்ந்த ஏவுகணையான கஸ்நாவி தரை-தரை இலக்குகளை தாக்கவல்லது.மேலும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாக் அறிவித்துள்ளது.

பாக்கின் Strategic Forces Command-ன் கீழ் ஆபரேசன் தயார் நிலை குறித்த பயற்சியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பல இராணுவ கமாண்டர்கள் முன்னிலையில் இந்த சோதனைை பாக் நடத்தியுள்ளது.

இந்த வெற்றிகரமான சோதனைக்கு பாக் தலைவர் ஆரிப் அல்வி மற்றும் பிரதமர் இம்ரான் ஆகியோர் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இந்தியா கே-4 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த பிறகு இந்த சோதனையை பாக் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.