புதிய வெட்ட முடியாத ஸ்மார்ட் வேலி : இந்தியா-வங்கதேச எல்லையில் திட்டம்

புதிய வெட்ட முடியாத ஸ்மார்ட் வேலி : இந்தியா-வங்கதேச எல்லையில் திட்டம்

பழைய வயர் வேலிகளை நீக்கிவிட்டு புதிய வெட்ட முடியாத ஸ்மார்ட் வேலியிடும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பழைய வயர் வேலிகளை எளிதாக வெட்டி வங்கதேசத்தவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுவது அதிகமாகிப் போயுள்ளது.வேலிகளை சேதம் செய்தும் விடுகின்றனர்.இதை தடுத்து எல்லையை சீரமைக்கும் முயற்சியாக பழைய இரும்பு வேலிகளை அகற்றி வெட்ட முடியாக வேலிகளை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

வங்கதேச எல்லை தவிர பாக் எல்லையிலும் இதுபோன்ற ஸ்மார்ட் வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக எல்லைப்பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பல இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளன.

அஸ்ஸாமின் சிலிச்சர்-லதிடிலா செக்டாரில் சுமார் 7.18கிமீ அளவிற்கு ஸ்மார்ட் வேலி ஏற்கனவே அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.ஒரு கிமீக்கு சுமார் 1 கோடி வரை இதற்காக செலவு செய்யப்படுகிறது.

இந்த வேலியை வெட்ட முடியாது என்பதால் சட்டவிரோதமாக யாரும் இந்தியாவிற்குள் ஊடுருவ முடியாது என எல்லை படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.