குடியரசு தினத்தில் முதல் முறையாக பறக்க உள்ள சின்னூக் மற்றும் அப்பாச்சி
விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அப்பாச்சி தாக்கும் வானூர்தியும்,சின்னூக் கனஎடை தூக்கி வானூர்தியும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக பறக்க உள்ளது.
கடந்த வருடம் படையில் இணைக்கப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு தனுஷ் ஆர்டில்லரி முதல்முறையாக கலந்துகொள்ள உள்ளது.தவிர களத்தில் வானூர்தி மற்றும் வாகனங்கள் வழியாக சிறப்பு படைவீரர்கள் நுழைந்து இலக்களை அழிப்பது போன்ற சிமுலேசன் காட்சியும் இடம்பெறும்.
விமானப்படை சார்பில் 41 விமானங்களும் , இராணுவம் சார்பில் 4 வானூர்திகளும் இடம்பெறும்.16 தாக்கும் விமானங்கள்,10 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 19 வானூர்திகள் பங்கேற்கும்.
இந்த வருடம் விமானப்படை தனது டேபிளோவில் ரபேல் மற்றும் தேஜசின் ஸ்கேல் மாடல்களை இடம் பெறச் செய்யும். Rafale is a twin-engine, multirole fighter aircraft ஆகும்.தற்போது நான்கு விமானங்களில் இந்திய விமானிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.