குடியரசு தின விழாவை கலக்க வரும் ஆச்சரிய தளவாடங்கள்

குடியரசு தின விழாவை கலக்க வரும் ஆச்சரிய தளவாடங்கள்

நாடுமுழுதும் குடியரசு தின விழாவை கொண்டாட தயாராகும் வேளையில் நமது முப்படைகளும் இராஜபாதையில் வீரநடை போட தயாராகி வருகின்றனர்.

இவ்வருட விழா புதிய முப்படை தளபதியையும் காண உள்ளது.இந்தியாவின் முப்படைக்கு ஒரு தளபதி உருவாக்கப்பட்ட பின் வரும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாக் கிட்டத்தட்ட போர் என்ற நிலைக்கு சென்று தற்போது அமைதி திரும்பியிருந்தாலும் பதற்றம் குறையவில்லை.

நமது படையில் பல புதிய தளவாடங்கள் இணைக்கப்பட்டு படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.பல புதிய ஏவுகணைகளும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமான தளவாடங்களாக இந்த வருட குடியரசு தினத்தில் அப்பாச்சி வானூர்தி பறக்க உள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப்படைக்காக வாங்கப்பட்ட உலகின் தலைசிறந்த தாக்கும் வானூர்திகள் தான் இந்த அப்பாச்சி

இது தவிர்த்து சின்னூக் எடைதூக்கி வானூர்தியும் பங்கேற்க உள்ளது.அமெரிக்காவிடம் இருந்து தான் இந்த வானூர்திகளும் பெறப்பட்டன.

அடுத்து Larson and Tubro தயாரிப்பில் அதிவேகமாக படையில் இணைந்து வரும் கே-9 வஜ்ராவும் இந்த வருட அணிவகுப்பில் கலந்து கொள்ளும்.

அடுத்து உறுதிப்படுத்தப்படாத தகவல்படி இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையான ஏசாட் எனப்படும் புதிய ஏவுகணையும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.