அரபியன் கடலில் சீனா-பாக் போர்பயிற்சி; விக்ரமாதித்யாவை களமிறக்கி இந்தியகடற்படை

அரபியன் கடலில் சீனா-பாக் போர்பயிற்சி; விக்ரமாதித்யாவை களமிறக்கி இந்தியகடற்படை

சீனா பாக் போர்க்கப்பல்கள் இணைந்து அரபியன் கடலில் ஒன்பது நாள் மாமெரும் கடற்போர் பயிற்சியை மேற்கொண்டு உள்ள நிலையில் இந்திய கடற்படை தனது விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலை அரபியன் கடற்பகுதியில்  களமிறக்கி உள்ளது.

முக்கிய தந்திரோபாய நடவடிக்கைக்காக விக்ரமாதித்யா களமிறக்கப்பட்டுள்ளாதாக விக்கரமாதித்யாவில் தற்போது உள்ள முக்கிய கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளர்.

கடந்த திங்கள் அன்று தொடங்கிய இந்த போர்பயிற்சி அரபியன் கடலில் சீன பாக் போர்க்கப்பல்கள் இணைந்து செயல்படும் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா பாக் உறவு மோசமடைந்து கிட்டத்தட்ட போர் அளவுக்கு சென்ற நிலையில் தற்போது அரபியன் கடலில் இரு நாடுகளும் போர் பயிற்சி செய்கின்றன.பிரிகேட்,நீர்மூழ்கி,நாசகார போர்க்கப்பல்கள் என சகலமும் இந்த பயிற்சியில் கலந்துள்ளன.

இந்நிலையில் ஒரு முக்கிய நோக்கத்திற்காக  MiG29K விமானங்களை சுமந்து நமது விக்கி அரபியன் கடலில் களமிறக்கப்பட்டுள்ளது.ஆனால் மேலதிக தகவல் ஏதும் வெளியிட கடற்படை மறுத்துவிட்டது.

சீனா கடந்த காலம் முதலே தனது ஆதிக்கத்தை வடக்கு அராபியன் கடல்பகுதியில் நீட்டிக்க முயற்சி செய்து வருகிறது.பாக் உடன் இணைந்து பல பில்லியன் டாலர்கள் செலவில் சீபெக் திட்டமும் குவாதார் துறைமுக திட்டமும் செயல்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.