பட்ஜெட் பஞ்சம்: வாங்க வேண்டிய தளவாடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் கடற்படை

பட்ஜெட் பஞ்சம்: வாங்க வேண்டிய தளவாடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் கடற்படை

தொடர் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இந்திய கடற்படை தான் வாங்க இருந்த combat systems மற்றும் கப்பல்களின் அளவை குறைத்தல் அல்லது முற்றிலும் நிறுத்தல் எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் கடற்படை கேட்ட
64,307 கோடிகளுக்கு பதிலாக 41,259  தான் கொடுக்கப்பட்டது.இந்த பணம் ஏற்கனவே வாங்கப்பட்ட தளவாடங்களுக்கு வருடாந்திரமாக கொடுப்பதற்கு கூட போதாது என்னும் நிலையில் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

கடற்படைக்கான மிக முக்கிய கண்ணிவெடிதகர்ப்பு கப்பல்கள் 12 வாங்க இருந்த நிலையில் அவை 8ஆக குறைக்கப்படுகின்றது.

அதே போல கடற்படைக்காக 10 Kamov KA 31 early warning helicopters வாங்க முடிவு செய்யப்பட்டு அவை தற்போது ஆறாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் மிக முக்கிய மேலதிக P8 I reconnaissance விமானம் பத்து வாங்கப்பட இருந்த நிலையில் அதுவும் ஆறாக குறைக்கப்படுகிறது.

சுமார் 20000 கோடிகள் செலவில் நான்கு Landing Platform Docks கப்பல்கள் வாங்கும் திட்டம் முழுதும் நிறுத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் குறைபாடு குறித்து ஏற்கனவே கடற்படை நாடாளுமன்ற நிலை குழுவிடம் கூறியிருந்தது.

2027க்குள் 200 போர்க்கப்பல்கள் என்ற கடற்படையின் திட்டம் தற்போது 175 கப்பல்கள் என குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.