தஞ்சைக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம் ?

தஞ்சைக்கும் சீனாவுக்கும் என்ன சம்பந்தம் ?

தஞ்சை தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மாவட்டம்.இங்கு தான் விமானப்டையின் தளம் ஒன்று உள்ளது.இதன் வரலாறு என்று பார்த்தால் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.லாக்ஹீடு ஹட்சன்,விக்கர்ஸ் வெலிங்டன்,ஹாக்கர் ஹரிகேன் மற்றும் மிகப் புகழ் பெற்ற பி-47 தண்டர்போல்ட் ஆகிய விமானங்கள் இந்த தளத்தில் இருந்து செயல்பட்டுள்ளன.

போருக்கு பிறகு இந்திய விமான ஆணையகத்திடம் இந்த தளம் ஒப்படைக்கப்பட்டு மக்கள்பயன்பாடு விமானங்கள் இயக்கப்பட்டு பின்பு அதுவும் நிறுத்தப்பட்டு 1990ல் இந்திய விமானப்படை மீண்டும் இந்த தளத்தை பெற்றது.2008 சென்னை வெள்ளத்தின் போது கூட இந்த தளத்தில் இருந்து வானூர்திகள் பறந்தன.

தற்போத இங்கு தான் 222வது சுகாய் ஸ்குவாட்ரான்களை நிலைநிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.தெற்கின் நிலைநிறுத்தப்படும் இரண்டாவது முன்னனி தாக்கும் ஸ்குவாட்ரான் இது தான்.இதற்கு முன் கோவையின் சூலூரில் 45வது ஸ்குவாட்ரான் தேஜஸ் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நீண்டதூர பலபணி விமானமான சுகாய் தெற்கு பிராந்தியத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளது.

மேலும் தஞ்சையில் நிலைநிறுத்த உள்ள சுகாய் விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணையுடன் நிலைநிறுத்தப்பட உள்ளது.எதிரிகளின் கடல்பரப்பு மற்றும் நில இலக்குகளை துல்லியத்தன்மையுடன் தாக்க கூடிய இந்த பிரம்மோஸ்-சுகாய் இணை தஞ்சாவூரில் நிலைநிறுத்தப்பட உள்ளது சீனாவுக்கெதிரான மிக்முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது.

இந்தியபெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கமும் பாக் உடன் இணைந்து அரபிக்கடல் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை நீட்டிக்கசீனா முயன்று வருகிறது.

இலங்கைக்கு வருகிறோம் அல்லது கடற்கொள்ளையற்களுக்கு எதிரான ரோந்து என்ற பெயரில் அணுசக்தி நீர்மூழ்கிகளை நமது வீட்டு வாசலுக்கே அனுப்பி வருகிறது.

இந்தியா இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்தாலும் சீனா ஓய்ந்த பாடில்லை.நமது பொசைடான் விமானங்கள் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை அடிக்கடி கண்கானித்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவுக்கெதிரான  தாக்கும் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு தான் தஞ்சையில் பிரம்மோஸ்-சுகாய் இணை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது விமானப்படை…நீர்மூழ்கிகளை நமது பொசைடான் வேட்டையாடும் நேரத்தில்பிரம்மோஸ் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும்.

இதற்கெனவே தான் தஞ்சையில் முன்னனி தாக்கும் படையணி அதிசக்திவாய்ந்த படையணி நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.