பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட டிஎஸ்பி; காஷ்மீரில் அதிர்ச்சி

பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட டிஎஸ்பி; காஷ்மீரில் அதிர்ச்சி

டிஎஸ்பி தேவிந்தர் சிங் என்ற அதிகாரி கடந்த சனியன்று இரு பயங்கரவாதிகளுடன் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

டிஎஸ்பி தேவிந்தர் சிங் பயங்கரவாதிகளுடன் பிடிபட்டது கொடூரமான குற்றம் என்றும் அவரும் மற்ற பயங்கரவாதிகள் போலவே நடத்தப்படுவார் என்றும்  காஷ்மீர் ஐஜி விஜய குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் தேவிந்தர் சிங் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.ஆனால் நேற்று அவர் இரு பயங்கரவாதிகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஜம்மு நோக்கி சென்றுள்ளார்.இது கொடூரமான குற்றம் மற்றும் அவர்  பாரபட்சமின்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

மேலும் தேவிந்தர் சிங் அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடத்தல் எதிர்ப்பு படையில் இருந்தவர்.கடந்த 9 ஜனவரி அன்று காஷ்மீர் நிலையை ஆராய வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவையும் வரவேற்றவர்.அனைத்திற்கும் மேலாக பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதாக குடியரசு தலைவர் விருது பெற்றவர்.

அவரது வீட்டில் இருந்து 3 ஏகே-47 மற்றும் 5 கிரேனேடு கைப்பற்றப்பட்டுள்ளது.

அவருடன் சேர்த்து நவீத் அகமது மற்றுய ராபி அகமது என்ற இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நவீத் அகமது என்பவன் முன்னாள் காஷ்மீர் காவல் துறை வீரன்.பின்னாளில் நான்கு ஏகே உடன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவன்.

Leave a Reply

Your email address will not be published.