பனியில் சறுக்கி பாக்கிற்குள் விழுந்த இராணுவ வீரர்; மீட்கும் பணி தீவிரம்

பனியில் சறுக்கி பாக்கிற்குள் விழுந்த இராணுவ வீரர்; மீட்கும் பணி தீவிரம்

காஷ்மிரின் குல்மார்க் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது தவறுதலாக பனியில் சறுக்கி பாக் பகுதிக்குள் விழுந்துவிட்டார் இராணுவ வீரர் ஹவில்தார் ராஜேந்திர சிங் நெகி.

கடந்த ஜனவரி 8ல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.முதலில் காணமல் போனதாக எண்ணிய இராணுவம் பின்னரே அவர் பாக் பகுதிக்குள் விழுந்திருப்பதை அறிந்துள்ளது.

அவரது குடும்பத்தினர் அவரை பத்திரமாக மீட்க சொல்லி அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவத் தரப்பு தகவல்படி, நெகி அவர்களை மீட்க அனைத்து விதமான முயற்சிகளும்  முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

நெகி அவர்கள் டேராடூனை சேர்ந்தவர்.கடந்த 2002ல் 11வது கார்வால் படைப் பிரிவில் இணைந்து தனது இராணுவ பயணத்தை தொடங்கினார்.

கடந்த நவம்பரில் தான் அவர் குல்மார்க் பகுதியில் பணியில்இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.