ஆர்டர் வந்தால் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்போம்:தளபதி நரவனே
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும்படி ஆர்டர் கிடைத்தால் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என இராணுவ தளபதி நரவனே அவர்கள் கூறியுள்ளார்.
பாக் ஆக்கிரமித்தது உட்பட காஷமீரின் அனைத்து பகுதிகளும் இந்தியாவுடையது என பாராளுமன்றமே கூறியுள்ளது என தளபதி கூறியுள்ளார்.
பாராளுமன்றம் அதை விரும்புகிறது எனில் கண்டிப்பாக பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது தான் என கூறியுளார் தளபதி.அதே போல இராணுவத்திற்கு மீட்கும்படி உத்தரவு கிடைத்தால் இராணுவம் நடவடிக்கை எடுக்கும்.
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை எடுக்க இராணுவம் தயாராக உள்ளதாக ஏற்கனவே தளபதி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
காஷ்மீரின் சிறப்பு சட்டம் நீக்கம்பெற்ற பிறகு இந்திய அமைச்சர்கள் வெளிப்படையாகவே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு குறித்து பேச தொடங்கினர்.
வெளிவிவகார துறை அமைச்சர் ஏற்கனவே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையது,விரைவில் இந்தியா அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் என கூறியிருந்தார்.
எல்லை முழுதும் படைகள்உள்ளன.பாக்ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க நிறையத் திட்டங்கள் உள்ளன.அவற்றை செயல்படுத்துவோம்.வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என அவர் கூறியுள்ளார்.