உள்நாட்டு தயாரிப்பு டோர்பிடோ வருணாஸ்திரா-கடற்படை விரைவில் பெறுகிறது
இந்தியா உள்நாட்டு தயாரிப்பு கனரக நீர்மூழ்கி எதிர்ப்பு டோர்பிடோவான வருணாஸ்திராவை விரைவில் இந்திய கடற்படை பெற உள்ளது.இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு திறனுக்கு வலுசேர்க்க உள்ளது நம் டோர்பிடோ.
இந்தியாவின் Naval Science and Technological Laboratory (NSTL) தான் இந்த டோர்பிடோக்களை மேம்படுத்தியுள்ளது.வரும் நான்கு மாதத்திற்குள் இந்த டோர்பிடோ படையில் இணைக்க உள்ளது கடற்படை.
இந்த கனஎடை டோர்பிடோ படையில் இணையும் பட்சத்தில் கனஎடை டோர்பிடோக்களை வடிவமைத்து தயாரிக்கும் திறன் கொண்ட எட்டு நாடுகளுள் இந்தியாவும் இணையும்.
கனஎடை வருணாஸ்திரா கப்பலில் வைத்து ஏவப்படக்கூடிய மின்னாற்றலில் இயங்கும் தானியங்கு வழிகாட்டு அமைப்பை கொண்ட அதிநவீன டோர்பிடோ ஆகும்.
ஸ்டீல்த் நீர்மூழ்கிகளை கூட தன் intelligence திறனால் கண்டறிய கூடிய திறன் கொண்டது.1500கிகி எடை கொண்ட இந்த டோர்பிடோ 250கிகி எடை உடைய வெடிபொருளை சுமந்து செல்லகூடியது.40கிமீ வரை செல்லும் ஆற்றல் கொண்டது.7-8மீ நீளமும் 533 mm அகலமும் கொண்டது.மணிக்கு 74கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி என இரண்டிலும் வைத்து ஏவலாம்.
வருணாஸ்திரா பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதுள்ளது.