Breaking News

கார்போரல் குருஸ்வெக் சிங்

கார்போரல் குருஸ்வெக் சிங்

ஜனவரி 1,2016 மாலை பதன்கோட் தளம் தாக்குதலுக்கு உள்ளான போது விமானப்படையின் சிறப்பு படையான கருட் கமாண்டோ தாக்கும் குழுவில் இருந்த வீரர்களுள் ஒருவர் தான் கார்போரல் குருஸ்விக் சிங்.பதன்கோட் தளத்தில் தேடும் குழுவில் இருந்த கமாண்டோ வீரர்களுள் ட்ராக் கமாண்டோ தான் கார்போரல் குருஸ்விக் அவர்கள்.

02 ஜனவரி 2016 மாலை 03.10 மணி.பயங்கரவாதிகள் நடமாட்டத்தை உணர்ந்த அவர் மற்ற கமாண்டோக்களுக்கு எச்சரிக்கை செய்து பயங்கவாதிகளை நோக்கி விரைவாக முன்னேறினார்.

நமது வீரர்களை பயங்கரவாதிகள் பார்த்துவிட கடும் சண்டை தொடங்கியது.இந்த சண்டையில் நமது வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கார்போரல் குருஸ்விக் சிங் மற்றும் அவரது  துணை வீரர் ( buddy officer) பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கினர்.இந்த சண்டையில் கார்போரலுக்கு மூன்று முறை குண்டடி பட்டது.

இந்நிலையில் கூட களத்தை விட்ட வெளியேற மறுத்து தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு மிக அருகே போர்புரிந்தார்.

அவரது இணையற்ற வீரம் மற்றும் தன்னை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் 25 நிமிடம் மேலதிக படை வரும் வரை பயங்கரவாதிகளை அதற்கு மேல் நகராத வண்ணம் ஒரே இடத்தில் இருக்கும் வண்ணம் தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தார்.

இதன் மூலம் பயங்கரவாதிகள் தளத்தின் முக்கிய பகுதிகளான தொழில்நுட்ப பகுதி, விமானங்கள் நிறுத்தும் பகுதி ஆகியவற்றுக்குள் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டமாக ஏற்பட்ட படுகாயம் காரணமாக கார்ப்போரல் குருஸ்விக் சிங் வீரமரணம் அடைந்தார்.

தைரியம்,தன்னலமின்மை மற்றும் அதிஉயர்ந்த தியாகம் காரணமாக அவருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

வீரவணக்கம் 

Leave a Reply

Your email address will not be published.