AMCA_Mk2 என்ஜின் உள்நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டும்:டிஆர்டிஓவிடம் விமானப்படை வலியுறுத்தல்

AMCA_Mk2 என்ஜின் உள்நாட்டு தயாரிப்பாக இருக்க வேண்டும்:டிஆர்டிஓவிடம் விமானப்படை வலியுறுத்தல்

அடுத்த தலைமுறை அதிநவீன பலபணி போர் விமானத் தாயாரிப்பில் தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது.பல பில்லியன் டாலர்கள் அளவிலான இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் கையெழுத்தாகும்.இந்த விமானங்கள் உள்நாட்டு தயாரிப்பு என்ஜின்களை பெற்றிருக்க வேண்டும் என விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

2026 வாக்கில் இந்த விமானங்கள் விண்ணில் பறக்க உள்ளது.என்ஜின் தயாரிப்பில் நாம் தன்னிறைவு பெறுவது அவசியம் என விமானப்படை கருதுகிறது.

முதல் இரு AMCA ஸ்குவாட்ரான்கள் அமெரிக்க தயாரிப்பான  GE 414 engine-ஐ பெற்றிருக்கும் எனினும் இந்த விமான என்ஜின்கள் பெறும் போதே டிஆர்டிஓ வெளிநாட்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்து
இந்தியாவிற்கான aero engine plant ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.நமக்கான ஒரு என்ஜினை நாம் கண்டிப்பாக பெற வேண்டும்.ஆம்கா மேம்பாட்டுடன் இதுவும் நடைபெற வேண்டும் விமானப்படை கூறியுள்ளது.தேவையெனும் பட்சத்தில் மேற்கு நாடுகளிடம் இருந்து உதவி கோரலாம் எனவும் விமானப்படை கூறியுள்ளது.

தற்போது டிஆர்டிஓ ஆம்கா மேம்பாட்டிற்கான முதற்கட்ட வடிவமைப்பு பணிகளில் உள்ளது.திட்டம் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் முதல் சோதனைவிமானம் பறப்பு சோதனைகளுக்கு தயாராகும் என டிஆர்டிஓ கூறியுள்ளது.

விமானப்படை இந்த ஆம்கா விமானத் தயாரிப்புக்கு அதிக ஆதரவு கொடுத்து வருகிறது.

காவரி என்ஜின் திட்டமும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.அமெரிக்காவுடன் டிடிடிஐ திட்டத்தில் தொழில்நுட்ப பகிர்வும் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.