
இரகசியாக விமான தளங்கள் சீரமைப்பு: 8.6 பில்லியன் டாலர்கள் செலவில் நடந்த பணிகள்
இந்திய விமானப்படை தனது 30 விமான தளங்களை சுமார் 8.6 பில்லியன் டாலர்கள் செலவில் இரகசியமாக நவீனப்படுத்தி முடித்துள்ளது.அனைத்து கால நிலைகளிலும் பயன்படுத்தும் வண்ணம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தாெலைத் தொடர்பு, navigation aids, landing aids, direction finding instruments மற்றும் automated air traffic management systems ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Modernisation of Airfields Infrastructure என்ற திட்டத்தில் கீழ் கடந்த டிசம்பர் 2019லிலேயே அனைத்து விமான தளங்களும் சீரமைக்கப்பட்டுவிட்டன.
சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்நு
Tata Power Strategic Engineering Division (TPSED) இந்திய விமானப்படையுடன் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.அமெரிக்காவின் Raytheon ; ஐரோப்பாவின் Northrop Grumman’s Arm called the Park Air Systems, பிரிட்டனின் Moog Fernau, ஆஸ்திரேலிய MTech Systems மற்றும் டென்மார்க்கின் Terma ஆகியவை குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் ஆகும்.
கடந்த 2009ல் இந்த திட்டத்திற்கான டென்டர் அறிவிக்கப்பட்டு அதில் TPSED நிறுவனம் வெற்றி பெற்றது.அதற்கான ஒப்பந்தம் கடந்த March 16, 2011ல் கையழுத்தானது.ஐந்து தொகுதிகளாக 30 தளங்கள் இதன் மூலம் நவீனப்படுத்தப்படும் என்பதே திட்டம்.
இதில் முதன் முறையாக பஞ்சாபில் உள்ள பதின்டா விமானப்படை தளம் மார்ச் 2014ல் நவீனப்படுத்தப்பட்டது.அதன் பிறகு 69 மாதத்தில் மற்ற 29 தளங்களும் நவீனப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது விமானப்படை மேலும் 37 தளங்களை இதே முறையில் நவீனப்படுத்த உள்ளது. 24X7 நேரமும் இயங்கும் வண்ணம் இந்த தளங்கள் நவீனப்படுத்தப்படும்.