
இந்தியாவின் அடுத்த மெகா திட்டம்:5000கிமீ செல்லும் நீர்மூழ்கி ஏவு ஏவுகணை
கே-4 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணையின் வெற்றிகரமான மேம்பாட்டு சோதனைக்கு பிறகு நமது டிஆர்டிஓ 5000கிமீ வரை செல்லக்கூடிய ஏவுகணையைதயாரிக்க உள்ளது.கிட்டத்தட்ட தரை-தரை செல்லக்கூடிய அக்னி 5க்கு இணையாக மேம்படுத்த உள்ளது.
ஆசியாவின் அனைத்து பகுதிகள், ஆப்பிரிக்காவின் சில பகுதிகள்,ஐரோப்பா மற்றும் தென்சீனக் கடலில் உள்ள நாடுகள் என அனைத்தும் இந்த கே-5 ஏவுகணை தாக்கும் இலக்கிற்குள் வரும்.ஆனால் தற்போது இந்த திட்டம் குறித்து எந்த தகவலும் டிஆர்டிஓ வெளியிடவில்லை.
தற்போது கே-4 ஏவுகணை ஒரே வாரத்தில் இரு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த கே-4 ஏவுகணைகள் புதிய அரிகந்த் ரக நீர்மூழ்கிகளில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.