500 சிறப்பு படை வீரர்களுடன் மாபெரும் ஏர்போர்ன் பயிற்சி
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் சுமார் 500 சிறப்பு படை வீரர்களை கொண்டு “விங்க் ரைடர்” எனப்படும் மாபெரும் ஏர்போர்ன் பயிற்சியை இந்திய இராணுவம் நடத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 10ல் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.இரவு பகல் என வீரர்கள் C-130 Hercules மற்றும் C-17 globemaster transport விமானங்களில் இருந்து குதித்து பயிற்சிகள் மேற்கொண்டனர்.
கடினமாக பகுதியில் இயங்குவதற்கும் , இந்திய விமானப்படை மற்றும் இராணுவத்தின் கூட்டு செயல்பாட்டை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் பொருட்டும் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.போர் என்று வரும் போது சிறப்பு படை வீரர்கள் எதிரியின் முக்கிய பாதுகாப்பு இலக்கை அழிக்க எதிரி நாட்டில் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வான் வழியாக தரையிறக்க படுவர்.இதற்கு இரு படைகளின் ஒருங்கிணைப்பு மிக அவசியம்.மேலும் தரையிறங்கும் வீரர்கள் கீழே இறங்கியவுடன் தங்களை ஒருங்கிணைத்து சிறந்த திட்டத்துடன் இலக்கை தாக்க/கைப்பற்ற வேண்டும்.இதற்கு கடினமான பயிற்சிகள் என்றைக்குமே தேவை.
இதற்கு முன் இதே வடகிழக்கு பகுதியில் இந்திய இராணுவம் தனது புதிய Integrated Battle Groups (IBG) பயிற்சியை நடத்தியது.ஹிம் விஜய் எனப்படும் இந்த பயிற்சியை அருணாச்சலில் 17 கார்ப் படைபிரிவு நடத்தியது.
சீனாவுடன் போர் எனும்போது இந்த சிறிய சக்திமிக்க படை மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தும்.
சீனாவுக்கெதிராக இந்திய இராணுவம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.