ஆறே நாளில் இரண்டாவது முறையாக கே-4 ஏவுகணை சோதனை
கடந்த ஜன 24 அன்று தனது nuclear triad-ஐ வலுப்படுத்தும் பொருட்டு 3500கிமீ தூரம் வரை செல்லக்கூடிய நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய பலிஸ்டிக் ஏவுகணையை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீரடி ஏவு தளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
பகல்நேர சோதனையாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அரிகந்த ரக நீர்மூழ்கிகளில் இந்த கே-4 ரக ஏவுகணைகள் வைக்கப்படும்.இந்தியாவின் மீது யாரேனும் தாக்குதல் நடத்தி மொத்த இந்தியாவையும் செயல்படாமல் செய்தால் கூட கடலுக்கடியில் எங்கோ இருக்கும் நீர்மூழ்கியினுள் தூங்கி கொண்டிருக்கும் இந்த கே-4 நீர்மூழ்கிகள் விழித்துக்கொள்ளும்.
தற்போது அரிகந்த் அணுசக்தி நீர்மூழ்கி மட்டுமே கடற்படையில் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது BO-5 எனப்படும் 700கிமீ செல்லும் ஏவுகணை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.இதை கொண்டு இலக்கை தாக்க வேண்டும் என்றால் நாம் இலக்கிற்கு 700கிமீ வரை அருகே செல்ல வேண்டும்.ஆனால் கே-4 எனில் 3500கிமீ தூரத்தில் இருந்தே இலக்கை அழிக்கலாம்.