40 நாட்கள் போரிட தேவையான ஆயுதங்களை சேமிக்கும் இராணுவம்

40 நாட்கள் போரிட தேவையான ஆயுதங்களை சேமிக்கும் இராணுவம்

13லட்சம் வீரர்களை கொண்ட ஒரு சக்தி மிகு இராணுவம் தற்போது போர் வெடித்தால் 40 நாட்கள் இராணுவத்திற்கு தேவையான இராக்கெட்டுகள், ஏவுகணைகள் முதல் பெரிய காலிபர் டேங்க் ஆர்டில்லரி ஷெல்களை வரை போரிட தேவையான அனைத்து வெடிபொருள்களின் இருப்பை அதிகரித்து வருகிறது.

தற்போது முதல் பத்து நாட்கள் போரிட தேவையான வெடிபொருள்கள் இருப்பினும் இதை 40 நாட்களான மாற்றும் முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது.

இதனால் தற்போது இராணுவம் போருக்கு தயாராக உள்ளது என்று அர்த்தமல்ல ஆனால் சீனா மற்றும் பாக்கை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையில் இராணுவம் இறங்கியுள்ளது.

ஏற்கனவே முக்கிய வெடிபொருள்கள் இருப்பு நிலை இல்லாமலிருந்த குறை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 24 ஒப்பந்தங்கள் மூலம் 12890 கோடிகள் செலவில் தீர்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.