இரண்டாம் அணு ஆயுத பதிலடியை உறுதி செய்யும் கே-4 ஏவுகணை

இரண்டாம் அணு ஆயுத பதிலடியை உறுதி செய்யும் கே-4 ஏவுகணை

கடந்த திங்கள் அன்று நமது  Defence Research and Development Organisation (DRDO) வெற்றிகரமாக  கே-4 intermediate-range, nuclear-capable, submarine-launched ballistic missile (SLBM) சோதனை செய்தது. ஆந்திராவின் கடலோர பகுதியில் நீரடி குழாய் போன்ற ஏவு அமைப்பின் உதவியுடன் இந்த சோதனை செய்யப்பட்டது.

சோதனை குறித்து டிஆர்டிஓ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனினும்  Notice to Airmen (NOTAM) எனப்படும் எச்சரிக்கையை மட்டும் வங்காளவிரிகுடா பகுதியில் 3,400 km அகலத்திற்கு ஜனவரி 19 முதல் 21 வரை அறிவித்திருந்தது.
 K-4 SLBM கிட்டத்தட்ட 2 டன் அணுவெடிபொருளை சுமந்து 3500கிமீ வரை செல்லும் ஆற்றல் கொண்டது.

Ringer Laser Gyro Inertial Navigation System மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை முப்பரிமாண தகவல்களை பெற்று ஹைப்பர்சோனிக் வேகத்தில் இலக்கை தாக்கி அழிக்கும்.இது மாபெரும் அழிவை இலக்கிற்கு ஏற்படுத்தும்.

கடந்த முறை அரிகந்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 750கிமீ வரை செல்லும் K-15 Sagarika SLBM உடன் இந்த புதிய K-4 ஏவுகணை வருகிற அனைத்து அரிகந்த் ரக நீர்மூழ்கியிலும் இருக்கும் என கூறப்படுகிறது.எந்த நாடேனும் இந்தியாவை அணுஏவுகணை கொண்டு தாக்கினால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் இரண்டாம் கட்ட தாக்குதல் நடைபெறுவதை இந்த அரிகந்த்-கே4 இணை உறுதிபடுத்தும்.

இதற்கு முன் கே-15 750கிமீ வரை மட்டுமே செல்லும் என்பதால் நமது நீர்மூழ்கி இலக்கிற்கு 750கிமீ வரை செல்ல வேண்டும்.ஆனால் தற்போது 3500கிமீ தூரத்தில் இருந்தே தாக்கலாம்.மற்றும் இதன் மூலம் நீர்மூழ்கி எதிரிகளுக்கு அகப்படுவது மிக குறைவே.

சீனாவிற்கு எதிரான ஆகச் சிறந்த ஆயுதமாக இந்த அரிகந்த்-கே4 இணை இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.