புதிய அமெரிக்கத் தயாரிப்பு SIG-716G2 துப்பாக்கிகளை பெற்றது இந்திய இராணுவம்

புதிய அமெரிக்கத் தயாரிப்பு SIG-716G2 துப்பாக்கிகளை பெற்றது இந்திய இராணுவம்

காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாக் படைகளுக்கு எதிராக நம் இராணவ துருப்புகளின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு புதிய அமெரிக்கத் தயாரிப்பு துப்பாக்கிகளை இந்திய இராணுவம் பெற்றுள்ளது.

இத்துடன் இராணுவ வீரர்களுக்கு ஸ்னைப்பர் துப்பாக்கிகளுக்கான குண்டுகளையும் பெற்று முன்னனிவீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

முதல் தொகுதி 10,000 SiG 716 assault rifles  துப்பாக்கிகள் இந்தியா வந்துள்ளதாகவும் அவை இராணுவத்தின் மேற்கு கட்டளையக பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இராணுவத்தின் மேற்கு கட்டளையகம் தான் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்கள் முதல் எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்களை தடுப்பது வரை முக்கியப் பங்காற்றி வருகிறது.

ஆபரேசன்களில் தினசரி ஈடுபடும் வீரர்களுக்கு இந்த புதிய ரக துப்பாக்கிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் தாக்கும் திறனை அதிகரிக்க இயலும்.

இந்த ரக துப்பாக்கிகளை வாங்க ஏற்கனவே Rs 700 crore செலவில்   72,400 துப்பாக்கிகள் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிகளை US arms maker Sig Sauer நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.”அவரசத் தேவை ” என்பதின் கீழ் இந்த ரக துப்பாக்கி வாங்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிகளில்  66,000 இராணுவத்திற்கும் கடற்படைக்கு 2,000 மற்றும் விமானப்படைக்கு
4,000 என்ற அளவில் பிரித்து வழங்கப்படும்.

 Sig Sauer SIG716 7.62×51 mm துப்பாக்கிகள் தற்போது படையில் உள்ள  5.56x45mm Insas rifles துப்பாக்கிகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும்.

இது தவிர 7 லட்சம் AK-203 assault rifles  இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.