MH-60R வானூர்தி வாங்கும் ஒப்பந்தம்-இன்று முடிவு செய்யப்பட வாய்ப்பு

MH-60R வானூர்தி வாங்கும் ஒப்பந்தம்-இன்று முடிவு செய்யப்பட வாய்ப்பு

கிட்டத்தட்ட கடற்படையின் ஒரு தலைமுறை காத்திருப்பிற்கு பிறகு, இந்தியா-அமெரிக்கா நடத்த உள்ள  2+2  Indo-US Ministerial Dialogue-ன் போது  24 Lockheed Martin’s MH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை வானூர்திகள் வாங்குதல் குறித்த இறுதி ஒப்பந்தம் குறித்து பேசி முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது படையில் உள்ள பழைய  Sea King Mk 42B/C மற்றும் Ka-28 வானூர்திகளுக்கு மாற்றாக இந்த வானூர்திகள் படையில் இணைக்கப்பட உள்ளது.

Industrial Security Annex (ISA) எனப்படும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன.இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.

இரு நாடுகளும் இணைந்து Defense Technology and Trade Initiative (DTTI) -Standard Operating Procedure (SOP) ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.இதன் மூலம் இரு நாடுகளும் இணைந்து
புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்த முடியும்.2012லிலேயே தொடங்கப்பட்டாலும் இந்த திட்டத்தின் கீழ் எந்த இராணுவ புரோஜெக்டுகளும் இதுவரை நடைபெறவில்லை..

இதுதவிர நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில்  free and open Indo-Pacific region என்ற கருத்து குறிந்தும் பேசப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் அவர்களும் அமெரிக்க அமைச்சர் மார்க் எஸ்பர் அவர்களும் நடைபெற உள்ள 2+2 பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு , பயங்கரவாத எதிர்ப்பு,இணைந்த பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், இராணுவ தளவாட ஒப்பந்தங்கள் குறித்து பேச உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் தான் அமெரிக்கா இந்தியாவிற்கு  13  MK 45 5 inch/62 calibre (MOD 4) naval guns வழங்க அனுமதி அளித்தது.தவிர 3,500 D349 Projectile, 5”/54 MK 92 MOD 1 ammunition ஆகியவையும் வழங்க அனுமதி வழங்கியது.இந்த துப்பாக்கிகள் கடற்படையின் P15A மற்றும் P17A கப்பல்களில் பயன்படுத்தப்படும்.

இரஷ்யாவை தவிர்த்து தற்போது இந்தியா தளவாடங்களுக்காக அமெரிக்காவை நாடி வருகிறது.சீனாவை எதிர்க்க ஒரு பலமான நட்பு நாடு அல்லது அதற்காக தளவாடங்களை தாராளமாக வழங்க முன்வரும் நாடாக அமெரிக்கா உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.