தேஜஸ் நடுத்தர ரக விமானத்திற்கான Metal-cutting வரும் பிப்ரவரியில் நடக்கிறது
பிப்ரவரி 2020ல் தேஜஸ் நடுத்தர ரக விமானத்திற்கான மெட்டல் கட்டிங் விழா நடைபெற உள்ளது.தொடர் தயாரிப்புக்கு உள்ளாவதற்கு முன்பாக நடைபெறும் முதல் படி இதுவாகும்.இந்த தகவலை Aeronautical Development Agency (ADA) யின் இயக்குநர் கிரிஷ் அவர்கள் உறுதிபடுத்தியுள்ளார்.
மார்க் 2 தேஜஸ் விமானம் தற்போது உள்ள தேஜசை விட அதிநவீன சென்சார்கள்,சக்திமிக்க ரேடார், கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன், மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் ஆகியவற்றை பெற்றிருக்கும்.Mk-1 மற்றும் Mk-1A ரகத்தை விட அதிக ஆயுதங்களை சுமக்க கூடியதாகவும் அதிக அளவு எரிபொருள் நிரப்பக்கூடியதாகவும் இருக்கும்.
விமானப்படை 123 Mk-1 மற்றும் Mk-II வாங்க உள்ளது.நடுத்தர ரக விமானங்களுக்கு இணையாக Tejas Mk-II அதிக எடையுடையதாக இருக்கும்.
Tejas (Mk-II) தற்போது படையில் உள்ள பிரான்ஸ் தயாரிப்பு Mirage -2000 மற்றும் பழைய Russian -made MiG-29 விமானங்களுக்கு மாற்றாக படையில் இணைக்கப்படும்.
வடிவம் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதாக டாக்டர் கிரிஷ் அவர்கள் கூறியுள்ளார்.
Tejas (Mk-II) வின் முதல் முன்மாதிரி இன்னும் இருவருடங்களுக்குள் பறக்க தொடங்கும். Tejas Mk -II வில் தற்போது உள்ளதை விட அதிக திறன் கொண்ட GE-414 engine பொருத்தப்படும்.தேஜஸ் மார்க் 2 2024ல் தனது முதல் பறப்பை மேற்கொள்ளும்.
தேஜஸ் விமானத் தயாரிப்பு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் இதுவரை ஒரு தேஜஷ் விமானம் கூட விபத்துக்குள்ளானதில்லை.