பாக் இராணுவ நிலைகளை அழிக்க தயாராக இருந்த இந்திய விமானப் படை: முன்னாள் தளபதியின் புதிய அதிர்ச்சி தகவல்

பாக் இராணுவ நிலைகளை அழிக்க தயாராக இருந்த இந்திய விமானப் படை: முன்னாள் தளபதியின் புதிய அதிர்ச்சி தகவல்

இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதியான தனோவா அவர்கள் தனது ரிட்டயர்மென்டுக்கு பிறகு புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிப்ரவரி 27 அன்று பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்குள் ஊடுருவிய பாக் விமானங்கள் இந்திய இராணுவ இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியிருந்தால் இந்திய விமானப்படை பாக் இராணுவ முகாம்களை தாக்கி அழித்திருக்கும் என அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்திய விமானப்படை பாக்கில் இருந்த பாலக்கோட் பயங்கரவாத முகாம்களை பிப் 27ல் தாக்கி அழித்தது.அதன் பிறகு பாக் விமானப்படை இந்திய இராணுவ  நிலைகளுக்கு குறி வைத்து அதன் பிறகு தாக்க வந்தது.ஆனால் அது தோல்வியடைந்து போகவே இந்தியா எந்த எதிர் தாக்குதலையும் நடத்தவில்லை.பாக் அன்று இந்திய இராணுவ நிலைகளை தாக்கியிருந்தால் இந்திய விமானப்படை பாக் இராணுவ முன்னனி பிரைகேடு முகாம்களை தாக்கி அழித்திருக்கும் என கூறியுள்ளார்.

எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள பாக் இலக்குகளை மட்டுமல்லாமல் பாக் இராணுவத்தின் முக்கிய நிலைகளை அன்று விமானப்படை அழித்திருக்கும் என கூறியுள்ளார்.

பூஞ்ச்-ராஜோரி செக்டாரில் precision guided bombs-களை இந்திய இலக்குகள் மீது பாக் வீசியும் அவை இலக்குகளை தாக்கவில்லை என முன்னாள் தளபதி தனோவா கூறியுள்ளார்.

ஆனால் பாக் விமானப்படைக்கு சரியான பாடம் அன்று புகட்ட முடியாததை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்.நமது தொழில்நுட்ப பின்னடைவு, தளவாடங்களை upgradation செய்வதில உள்ள தாமதம் ஆகியவை இதற்கு காரணம் எனவும் இந்திய பாதுகாப்பு அமைப்புள் அனைத்தும் இதற்கு சரிபாதி பொருப்பு என தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப தேவையை பாலக்கோட் தாக்குதலின் போது விமானப்படை கற்றுக்கொண்டது எனவும் கூறியுள்ளார்.

பிப்27 வானில் நடைபெற்ற சண்டையில் நமது பின்னடைவுக்கு தொழில்நுட்ப குறை தான் காரணம்.அன்று ரபேல் இருந்திருந்தால் வரலாறு மாறியிருக்கும் என பேசியுள்ளார்.

புதிய விமானங்கள் வாங்க பத்துவருட ஒப்பந்தம் தாமதம் ( இன்னும் வாங்கவில்லை என்பது கூடுதல் தகவல்,அதாவது பாடம் கற்பிக்கவில்லை) இல்லாமல் இருந்திருந்தால் அன்று பழைய மிக்-21விமானங்களுக்கு பதிலாக வி/க அபி அவர்கள் புதிய விமானத்தில் எதிரிகளை சந்தித்திருப்பார் என கூறினார்.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் இனி நடைபெற்றால் பாக் அதற்கு தகுந்த விலை தர வேண்டியிருக்கும் என முன்னாள் தளபதி தனோவா கூறியுள்ளார்.

1993 குண்டுவெடிப்பு, மும்பை தாக்குதல் போன்ற நிலைகளில் இந்தியா ராணுவ நடவடிக்கைகள் எடுக்க தயங்கியது.இப்போது நிலை மாறியுள்ளது.

உரிதாக்குதலுக்கு பதிலடி தரப்பட்டது போல இனி ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி உறுதியாக கிடைக்கும்.பாக்கிற்கும் இது தெரியும் என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.