இனி தொலைதூர பணியில் உள்ள வீரர்கள் குடும்பத்துடன் எளிதில் பேசலாம்-சேட்டிலைட் போன் வழங்க முடிவு

இனி தொலைதூர பணியில் உள்ள வீரர்கள் குடும்பத்துடன் எளிதில் பேசலாம்-சேட்டிலைட் போன் வழங்க முடிவு

நாட்டின் தொலைதூர முடுக்கில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்கு சேட்டிலைட் போன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கென 1400 தனித்த பணி செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அங்குள்ள இராணுவ வீரர்கள் குடும்பத்துடன் எளிதில் பேச அவர்களுக்கு  satellite communications system or VSAT வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற இடங்களில் பணிபுரியும் இராணுவம் மற்றும் துணை இராணுவ வீரர்களுக்கு
 VSAT வழியாக தினமும் ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படும்.

Digital Communication Commission (DCC) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.இது போன்ற இடங்களில் பணிபுரியும் வீரர்கள் தற்போது அங்கு அருகில் இருக்கும் கிராமங்களில் இருக்கும் டெலிபோன்களையே நம்பியுள்ளனர்.

இனி இந்த அமைப்பின் உதவியுடன் வீரர்கள் இணைப்பு பெற்று குடும்பத்துடன் சாதாரண விலையில் பேச முடியும்.மேலும் தினமும் ஒரு ஜிபி டேட்டா இலவசமாக பெற முடியும்.இதன் வேகம் நொடிக்கு 1-10 megabit என்ற அளவில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.