இந்தியமயமாகும் பிரம்மோஸ்-இரு முறை சோதனை வெற்றி

இந்தியமயமாகும் பிரம்மோஸ்-இரு முறை சோதனை வெற்றி

இந்திய-இரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவான சூப்பர்சோனிக் ஏவுகணை தான் பிரம்மோஸ்.

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இரு சோதனை செய்யப்பட்டுள்ளது.

முதல் வகையாக தரைப்படை வகை சோதனை செய்யப்பட்டது.வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் இந்தியா தயாரித்துள்ள  airframe மற்றும் fuel management system ஆகியவைற்றால் உருவான பிரம்மோஸ் தான் சோதனை செய்யப்பட்டது.

இதுதவிர ஏவுகணையில் நமது  DRDO வடிவமைத்து தயாரித்த  seeker மற்றும் மற்ற முக்கிய பாகங்களால் உருவான பிரம்மோஸ் தான் சோதனை செய்யப்பட்டுள்ளது.

என்னடா இவன் சொல்றானு நினைக்க வேண்டாம்.இந்திய இரஷ்ய கூட்டு தயாரிப்பு தான் பிரம்மோஸ்.ஏவுகணை கூடு முதல் உள்ளே உள்ள பாகங்கள் வரை நாம் பாதி அவர்கள் பாதி தான்.தற்போது இந்தியா என்ன செய்து வருகிறது என்றால் இரஷ்யா வழங்கி வரும் பாகங்களை இந்தியாவே மேம்படுத்தி தயாரித்து பிரம்மோசில் இணைத்து சோதனை செய்து வருகிறது.இதன் காரணமாக பிரம்மோஸ் இனி மேலதிக இந்திய தயாரிப்பாக மாறும்.போர் என்று வந்தால் மேற்படி நாமே நமக்காக பிரம்மோசை உற்பத்தி செய்ய முடியும்.இரஷ்யாவின் பாகங்களுக்காக காத்திருக்க அவசியமல்ல.

நமது முப்படைகளிலுமே பயன்படுத்த கூடிய பிரம்மோஸ் பிரம்மாஸ்திரமாகவே பார்க்கப்படுகிறது.அதன் தேவையும் மிக அவசியம்.எனவே அதை முடிந்த அளவு இந்தியமயமாக்குவதும் அவசியம்.மேலும் தற்போது இந்தியா மேம்படுத்தி வரும் பாகங்கள் எதிர்காலத்திற்கு நமக்கு உதவும்.எனவே இந்திய இந்த தொழில்நுட்பங்களை மாஸ்டர் செய்வது அவசியம்.

இரண்டாவது ரகமாக வான் வகை பிரம்மோஸ் சுகாயில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.இன்னும் சில சோதனைகளுக்கு பிறகு வான் படையிலும் பிரம்மோஸ் இணைக்கப்படும்.

தற்போது 290கிமீ தான் தாக்கும் என்றாலும் அதை 450கிமீக்கு நீட்டிக்க உள்ளது டிஆர்டிஓ.

இது தவிர இலகு ரக பிரம்மோஸ் என்ற வகையும் மேம்படுத்த வேலை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. BrahMos NG எனப்படும் இந்த ரகம் நமது தேஜசிற்காக வடிவமைக்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது பினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம்.

தற்போது சுகாய் ஒரு பிரம்மோசை தான் தூக்கி பறக்க முடியும் எனும் போது பிரம்மோஸ் என்ஜி படையில் இணைந்தால் மூன்றை கூட தூக்கி பறக்கமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.