பிரம்மோஸ் ஏற்றுமதி…! அடுத்த வருடம் பிலிப்பைன்சுடன் ஒப்பந்தம்

பிரம்மோஸ் ஏற்றுமதி…! அடுத்த வருடம் பிலிப்பைன்சுடன் ஒப்பந்தம்

இந்தியா இரஷ்யா தயாரிப்பில் மேம்படுத்தப்பட்ட உலகின் மிக வேகமான சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிலிப்பைன்சும் இந்தியாவும் விலை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில் ஒப்பந்தம் அடுத்த வருடம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தவிர தாய்லாந்து,இந்தோனேசியா,வியட்நாம் ஆகிய நாடுகளிடமும் இந்தியா பிரம்மோஸ் கடல் வகை ஏவுகணையை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தரைசார் பிரம்மோஸ் பேட்டரிகளை வாங்க பிலிப்பைன்ஸ் பேசிவரும் நிலையில் விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்தியா 100 மில்லியன் டாலர் கிரெடிட் அளித்து பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை செய்ய முன்வந்தாலும் பிலிப்பைன்ஸ் இராணுவம் தனது சொந்த நிதியில் வாங்க முயற்சிக்கிறது.

பிலிப்பைன்ஸ் இந்தியாவிடம் இருந்து குறைந்த அளவிலான இராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது.வளர்ந்து வரும் சீன அச்சுறுத்தலில் இருந்து தங்களது கடல்சார் சொத்துக்களை பாதுகாக்க பிலிப்பைன்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தவிர தாய்லாந்து அடுத்த வருடத்திற்குள் பிரம்மோஸ் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தத்தை முடிக்க வாய்ப்புள்ளதாக தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.கடற்கரை ரேடார் மற்றும் பிரம்மோஸ் ஆகிய முக்கிய தளவாடங்களை இந்தியாவிடம் இருந்து தாய்லாந்து வாங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவின் போர்க்கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணை இணைப்பிற்கான சாத்தியம் குறித்து அறிய இந்தியா இரஷ்யா இணைந்த குழு கடந்த 2018ல் சுரபயா தளத்திற்கு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.