உயிர்நீத்த தமிழக ராணுவ வீரர் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

உயிர்நீத்த தமிழக ராணுவ வீரர் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய   கிராம மக்கள்

                   மதுரை மாவட்டம் சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பாலமுருகன் என்பவர் அருணாச்சலப்பிரதேசம் கிட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மழையின் காரணமாக வாகனம் கவிழ்ந்து உயிர்நீத்தார்.

 அவரது உடல் 12.12.2019-ம் தேதியன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப  அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வினய் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தியதையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.