கடற்படையின் ட்ரைடன்ட் நடவடிக்கை

கடற்படையின் ட்ரைடன்ட் நடவடிக்கை
ட்ரைடன்ட் நடவடிக்கை என்பது 1971 போரில் இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கிய நடவடிக்கை.கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு கராச்சியை தீக்கிரையாக்கியது இந்தியக் கடற்படை.
இந்த நடவடிக்கை மிக மிக கடினமான அதே நேரம் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு முடிக்கப்பட்ட நடவடிக்கை.இந்தியக் கடற்படைக்கு துளி சேதம் கூட இல்லாமல் பாகிஸ்தானின்  ஒரு கண்ணிவாரிக் கப்பல் ,ஒரு நாசகாரிக் கப்பல், வெடிபொருள் கப்பல்,மற்றும் சில எண்ணைய் சேமிப்பு கிடங்குகளை துவம்சம் செய்தது.
எப்படி நடத்தி முடிக்கப்பட்டது?
இதற்கு முழு முதற் காரணம் அப்போது இந்தியா புதிதாக இறக்குமதி செய்திருந்த வித்யுத் வகை ஏவுகணைக் கப்பல்கள் மற்றும் அதனை இயக்கிய வீரர்கள் தான்.
1965 போருக்கு பின்பு, கடற்படையின் தேவை மற்றும் நவீனம் கருதி புதிய வித்யத் ( ஓசா வகை ) வகை கப்பல்கள் சோவியத் யூனியனிடம் இருந்து வாங்கப்பட்டன.1965 போரில் பாக் கடற்படை இந்திய கடற்கரை நகரமான ட்வார்க்கா நகரை தாக்கியது.ரேடார் நிலையத்தை தாக்குகிறோம் என்ற பெயரில் நகரத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்படுத்திவிட்டனர்.
இதன் காரணமாக கடலோர பாதுகாப்பு மற்றும் இந்தியக் கடற்படையின் வலிமையை பெருக்க முடிவு செய்யப்பட்டு அப்போதயை மதிப்பில் 35கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.இதன் பகுதியாக தான் ஏவுகணை கப்பல்கள் வாங்கப்பட்டன.
இந்தக் கப்பல் எளிய வடிவமைப்பை கொண்டிருந்தது.
extremely thin skinned 200 ton hull மற்றும் அதிக சக்தியுடைய என்ஜின்கள் 34 நாட் வேகத்தை கொடுக்கும்.சிறியதாக இருந்ததால் ரேடார் கண்களில் மிக குறைவாகவே அகப்படும்.இதன் ஆற்றல் மிகுந்த ரேடார் அந்தக் காலத்தில் இருந்த மற்றதை விட நவீனமாக இருந்தது.ஏவுகணையை ஏவி பெரிய கப்பல்களை கூட மூழ்கடித்து மிக வேகமாக திரும்பும் ஆற்றல் இதற்கு இருந்தது.
இந்தக் கப்பல்களின் முதன்மை பணி கடற்கரை பகுதிகளை பாதுகாப்பது தான் என்பதால் இதனால் நீண்ட தூரம் செல்லுமளவுக்கு வடிவமைக்கப்படவில்லை.1969ல் எட்டு கப்பல்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டு , மாஸ்கோ சென்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்திய கடற்படை அதிகாரிகுள் இந்த கப்பல்களை இயக்குவதற்கான பயிற்சியை மார்ச் 1970ல் முடித்தனர்.இந்தக் கப்பல்களை பெரிய கப்பல்களில் ஏற்றி இந்தியா கொண்டுவரப்பட்டது.
இந்தக் கப்பல்கள் தான் கராச்சியை தீக்கிரையாக்கின.எட்டு கப்பல்கள் வாங்கப்பட்டு அவை கடற்படையின் 25வது ஏவுகணை கப்பல் ஸ்குவாட்ரானில் இணைக்கப்பட்டன.விஜிதா,வித்யுத்,வினாஷ்,வீர், நாஷக்,நிபட்,நிர்கத் மற்றும் நிர்பிக் என எட்டு கப்பல்களும் படையில் இணைந்தன.
ஒவ்வொரு கப்பலிலும் நான்கு
SS-N-2B Styx தரை-தரை தாக்கும் ஏவுகணைகள் இணைக்கப்பட்டிருந்தது.அவை 75கிமீ உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லது.
1971, டிசம்பர் 4ல் மூன்று வித்யுத் வகை கப்பல்களை கொண்ட தாக்கும் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. ( நிபட்,நிர்கத்,வீர்). இரு நீர்மூழ்கி கப்பல்கள் கில்டன் மற்றும் கட்சல், ஒரு டாங்கர் கப்பல் ஐஎன்எஸ் போஷாக் போன்ற கப்பல்கள் அந்த தாக்கும் குழுவிற்கு பாதுகாப்பு வழங்க நிபட் கப்பலில் இருந்த கமாண்டர் பி.பி யாதவ் அவர்களின் தலைமையில் மொத்த குழுவும் கார்ச்சியை தாக்க தயாராகின.
முன்பே வகுக்கப்பட்ட திட்டத்தின்படி, தாக்கும் குழு பாக் விமானங்களின் தாக்கும் எல்லைக்குள் செல்லாதவாறு 460கிமீ கடந்து கராச்சியின் தெற்கு பகுதியில் பகல் முழுதும் நிலை கொண்டிருந்தன.கராச்சி துறைமுகத்தை இரவில் தாக்குதவது தான் திட்டம் ஏனெனில் அப்போதைய பாக் விமானங்கள் இரவில் இயங்கும் வசதி பெற்றிருக்கவில்லை.
மாலை நெருங்கும் வேலையில் ,கில்டன் மற்றும் மூன்று ஏவுகணை  கப்பல்களும் கராச்சியை நெருங்கின.கராச்சிக்கு 70கிமீ தூரத்தை நெருங்கிய நமது கப்பல்களுக்கு இலக்கு தென்பட ஆரம்பித்தது.
நிர்கத் வடமேற்கு பகுதியில் வேகமாக நகர்ந்து , இலக்கை உறுதி செய்துகொண்ட பின் அங்கு ரோந்து பணியில் இருந்த பாக்கின் நாசகாரி போர்க்கப்பலான கைபர் மீது ஒரு ஏவுகணையை செலுத்தியது.வருவது விமானம் என தவறாக நினைத்த கைபர் அதை தனது விமான எதிர்ப்பு துப்பாக்கியால் எதிர்கொள்ள ஏவுகணை கப்பலின் வலப்பக்கத்தை தாக்கியது.கப்பலின் இயக்கம் நின்று கப்பல் இருளில் மூழ்க முதலாவது பாய்லர் அறை வெடித்து சிதறியது.கப்பலை சுற்றி புகைமூட்டம் பெருக கைபர் தன் தலைமையகத்திற்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியது.
“எதிரி விமானம் 020 FF 20 நிலையில் எங்களை தாக்கியுள்ளது.பாய்லர் அறை வெடித்தது.கப்பல் இயக்கமின்றி நின்றுவிட்டது”என்பது அந்த செயதி.
அவசரகதியில் பதற்றத்துடன் செய்தி அனுப்பியதால் தங்கள் இருப்பு குறித்த குறிப்பு வார்த்தையை தவறாக அனுப்பிவிட்டது.இதனால் மற்ற பாக் கப்பல்கள் அங்கு வர தாமதம் ஆனது.கப்பல் இன்னும  மிதப்பதை அறிந்த நமது நிர்கத் இரண்டாது ஏவுகணையை அனுப்ப அதையும் விமானம் என நினைத்து விமான எதிர்ப்பு துப்பாக்கியால் கைபர் தாக்க அது கப்பலை தாக்க  கப்பலின் இரண்டாவது பாய்லர் அறை வெடிக்க கப்பல்  மூழ்கியது.
அதே நேரத்தில் நிபட் கப்பல் வடகிழக்கு பகுதிக்கு நகர்ந்து இரண்டு இலக்குகளை தாக்கியது.இலக்குகளை உறுதி செய்த பின்  MV வீனஸ் சேலஞ்சர் மற்றும் அதை பாதுகாப்பாக அழைத்து சென்ற பாக் நாசகாரி கப்பல் ஷாஜகான் மீது ஒரு ஏவுகணை வீதம் இரண்டு ஏவுகணைகளை வீசியது.
சேனஸ்சர் வீனஸ் கப்பல் பாக் படைகளுக்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற அமெரிக்க கப்பல்.சைகனில் இருந்த அமெரிக்க படை பாக்கிஸ்தானுக்கு ஆயுதங்களை அந்த கப்பல் வழியாக அனுப்பி வைத்திருந்தது.இந்த கப்பலை ஷாஜகான் கப்பல் காவல் செய்து வழிநடத்திகொண்டிருந்து.
வீனஸ் கப்பலை தாக்கிய ஏவுகணையை அதை மூழ்கடித்தது.ஷாஜகான் கப்பல் மிக மோசமாக சேதமடைந்தது.அடுத்து வீர் கப்பல் பாக்கின் கண்ணிவாரிக் கப்பலான முகாபிசை தாக்கியது.
தொடர்ந்து  நிபட் காராச்சியை நெருங்கி சென்றது.கிட்டத்தட்ட 30கிமீ வரை நெருங்கி சென்றது.அங்கு இருந்த எண்ணைய் சேமிக்கு கிடங்குகள் மீது இரு ஏவுகணைகளை வீசியது.ஒரு ஏவுகணை இலக்கை தவற மற்றொன்று இலக்கை சரியாக தாக்க பலத்த சத்தத்துடன் கிடங்கு வெடித்து சிதறியது.
வந்த வேலை வெற்றிகரமாக முடிய நமது தாக்கும் குழு திரும்பியது.மொத்தமாக திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.இந்த மின்னலடி தாக்குதல் பாகிஸ்தானை கோமாவிற்கு கொண்டு சென்றது.
எஞ்சிய கைபரை தேடும் பணியில் இருந்த பாக் கடற்படைக்கு அதே நேரத்தில் முகாபிஸ் மூழ்கடிக்கப்பட்டது தெரியவில்லை.கைபரை தேடும் போது முகாபிஸ் கப்பலில் பிழைத்தவர்களை கொண்டு தான் அது கப்பலின் விதியை தெரிந்துகொண்டது.
ட்ரைடன்ட் நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி.தாக்குதலை கச்சிதமாக முடித்து  இந்திய துறைமுகத்திற்கு தாக்கும் குழு வந்து சேர்ந்தது.

இந்த தாக்குதலுக்கு பிறகு டிசம்பர் 8 அன்று பைத்தான் நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.