சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்த தகவல்கள்

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்த தகவல்கள்

சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் குறித்த கிராபிக் படத்தை வெளியிட்டுள்ளது.அதிக எடையுடைய மற்றும் பெரிய அளவிலானதாக தெரியும் இந்த கப்பல் அமெரிக்க சூப்பர் கேரியர் பானியில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டைப்-003 எனப்படும் இந்த விமானம் தாங்கி கப்பல் 89,000 டன்கள் எடையும் 318மீ நீளமும் மற்றும் 71மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.ஆச்சரியான தகவல் என்னவெனில் காலம் தாமதிக்காமல் இதற்கான கட்டுமானத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் ஷாங்காயில் உள்ள ஜியாச்னன் தளத்தில் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய டைப் 003 விமானம் தாங்கி போர்க்கப்பல் அமெரிக்காவின் நிமிட்ஸ் ரக கப்பல் போன்றே பார்ப்பதற்கு உள்ளது.கட்டுமானம் அமெரிக்க போர்க்கப்பல் போலவே அமையும்.

70 விமானங்கள் வரை ஒரே நேரத்தில் கப்பலில் நிறுத்த முடியும்.மாற்றத்தக்க எரிபொருள் மற்றும்   Electromagnetic Aircraft Launch System (EMALS) அமைப்பை கொண்டதாய் இந்த கப்பல் இருக்கும்.

சமீபத்தில் சாங்டோங் எனப்படும் தனது இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை சீனா படையில் இணைத்தது.ஏற்கனவே லயோனிங் எனப்படும் விமானம் தாங்கி கப்பலை இயக்கி வருகிறது.

தற்போது மூன்றாவது கப்பலுக்கான கட்டுமானத்தையும் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.