முதல் நான்கு ரபேலுடன் மீட்டியர் ஏவுகணைகளையும் தர பிரான்சிற்கு இந்தியா கோரிக்கை

முதல் நான்கு ரபேலுடன் மீட்டியர் ஏவுகணைகளையும் தர பிரான்சிற்கு இந்தியா கோரிக்கை

பிரான்ஸ் டெலிவரி செய்ய உள்ள முதல் நான்கு  Rafale fighters களுடன் அதிசிறந்த Meteor air-to-air missiles அனுப்ப இந்தியா பிரான்சிடம் கூறியுள்ளது.இந்த மீட்டியர் வான்-வான் ஏவுகணைகள்  120 to 150-km வரும் வான் இலக்குகளை சுட்டு வீழ்த்தக்கூடியது.பாக் அல்லது சீனாவின் எந்த விமானம் ஏவும் ஏவுகணைகளை விட நீண்ட தூரம் செல்லக்கூடியது.

இனி ஒரு பாலக்கோட் சம்பவம் நடந்தால் அதில் நமது கையே ஓங்கியிருக்கும்.முதல் Rafale fighters அடுத்த வருட மே மாதம் அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கும்.

குறைந்தபட்டசமாக 8-10 Meteor beyond visual range (BVR)ஏவுகணைகள் நான்கு ரபேல் விமானங்களுடன் டெலிவரி செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் சென்றிருந்த போது பாதுகாப்பு அமைச்சர் பிரான்சிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Rs 59,000 கோடிகள் அளவிலான இந்த ஒப்பந்தம் 36 விமானங்களுடன் அதற்கேற்ற ஆயுதங்களுடனும் வாங்க கடந்த செப்டம்பர் 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பாலக்கோட் தாக்குதலுக்கு பதிலடி என பாக் விமானங்கள் இந்திய நிலைகளை தாக்கிய போது இந்திய விமானங்களில் இருந்த இரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகள் போதிய தூரம் சென்று தாக்கும் வல்லமை இல்லாததால் மொத்த சம்பவத்திலும் பாகிஸ்தான் கையே ஓங்கி இருந்தது.

பாக்கின் எப்-16 விமானங்களை நீண்ட தூரத்தில் இருந்து அடிக்க நமது சுகாய் விமானங்களால் முடியவில்லை.காரணம் குறைவான தூரமே செல்லும் ஏவுகணைகள் பெற்றிருந்ததால்.இதற்காக தான் எப்-16ன் தாக்கும் வளையத்திற்குள் சென்று அபி அவர்கள் மிக்-21 விமானத்தை வைத்து ஒரு எப்-16 விமானத்தை அடிக்க மற்றொரு எப்-16 விமானம் அபி அவர்களின் விமானத்தை அடித்தது.அதன் பின் நடந்தது நாம் அறிந்ததே.

அந்த சண்டையின் போது பாக்கின்  F-16s விமானங்கள் நவீன  AIM-120C advanced medium-range air-to-air missiles (AMRAAMs) என்ற ஏவுகணையை கொண்டிருந்தன.இவை 100கிமீ தூரத்தில் வரும் இலக்குகளை கூட தாக்க கூடியது.

 நமது சுகாய் விமானங்கள் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை கூட நமது சுகாய் விமானங்கள் Dodge செய்ய முடிந்ததே தவிர திருப்பி அவற்றை தாக்க முடியவில்லை.

ஆனால் ரபேல் படையில் இணையும் பட்சத்தில் இந்நிலை மாறும்.சுகாய் ஒரு வானாதிக்க பறவை எனினும் அந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.ஆபரேசன் ஸ்விப்ட் ரிடார்ட் என இந்த சம்பவத்தை பாக் கூறுகிறது.ஒரு சுகாய் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் பாக் தெரிவித்துள்ளது.

அதிக தூரம் செல்லும் Meteor missiles ஏவுகணைகளால் இந்நிலை மாறும்.ராம்ஜெட் என்ஜினுடன் இந்த மீட்டியர் ஏவுகணை மாக் 4 வேகத்தில் செல்லும்.வான்-வான் ஏவுகணை ரகத்திலயே மீட்டியர் உலகின் தலைசிறந்த ஏவுகணை என வர்ணிக்கப்படுகிறது.

“a greater no-escape zone” உடன் ரபேல் தாக்கும் எல்லைக்குள் வரும் எந்த எதிரி விமானமும் தப்பிப்பது கடினம்.இது போன்றதொரு ஏவுகணை பாக் அல்லது சீனாவிடம் இல்லை.ஆனாலும் எதுவும் நிரந்தரமில்லை.நாளை சீனா இது போல ஒரு ஏவுகணையை மேம்படுத்தி பாக்கிற்கு வழங்கலாம்.அதற்குள் அதை விட நவீனமானதொரு ஏவுகணை விமானப்படைக்கு கிடைக்க இந்திய அரசு வழிவகை செய்வது  அவசியம்.

இதே சம்பவம் போரில் நடக்கிறது என வைத்துக்கொண்டால் இன்னேரம் விமானப்படை விமானங்கள் தளங்களுக்குள்ளேயே பதுங்கியிருக்க வேண்டியது தான்.அல்லது பறந்து பாக் ஏவுகணைகளுக்கு இறையாக வேண்டியது தான்.

ஆபரேசனை பொருத்து ரபேல் விமானம் 780-km to 1,650-km வரை செல்லக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.