தேஜசில் பறந்த இரஷ்ய விமானி; மீண்டும் பறக்க விருப்பம் தெரிவித்த விமானி
இந்தியா இரஷ்யா கூட்டுப்பயிற்சியின் போது தேஜஸ் விமானத்தில் பறந்த இரஷ்ய விமானி அதை வெகுவாக புகழ்ந்ததோடு மீண்டும் பறக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரஷ்ய விமானப்படையின் லெப் கலோ நெஸ்திராவ் அவர்கள் தான் தேஜசில் பறந்த இரஷ்ய விமானி ஆவார்.தேஜசில் பறந்து சுகாய்-30 விமானந்துடன் dogfight-ல் ஈடுபடுவேன் என அவர் கூறியுள்ளார்
இந்திய முப்படைகளும் இரஷ்ய முப்படைகளும் இணைந்து இந்திரா எனப்படும் போர்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றன..
பத்து நாள் பயிற்சி நடைபெற்று நேற்றோடு முடிவு பெற்றது.இதில் வான் பயிற்சிகள் புனே விமானப்படை தளத்தில் நடைபெற்றது.
இந்தியா மேம்படுத்திய தேஜஸ் விமானத்தில் இரஷ்ய விமானி ஒருவர் பறப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியா தேஜசில் பறக்க எனக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார் இரஷ்ய விமானி.
Mig-29, Sukhoi-30 மற்றும் Sukhoi-35 விமானங்களில் பறந்த எனக்கு தேஜசில் பறந்தது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.
கட்டுப்படுத்த எளிமையானதாகவும், இலகுவாகவும் உள்ளது என கூறியுள்ளார்.விமானி அறையில் உள்ள அமைப்புகள் அருமையாகவும், ejection seat நன்கு ஏற்ற வகையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
அழகான விமானம் நன்றாக பறக்காது என நாங்கள் இரஷ்யாவில் கூறுவோம்.ஆனால் தேஜஸ் அழகானதாகவும் நன்றாகவும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.