இந்திய இராணுவத்தின் அடுத்த தலைமை தளபதி தேர்வு-துணை தளபதி லெப் ஜென் நரவனே அவர்கள் தேர்வு

இந்திய இராணுவத்தின் அடுத்த தலைமை தளபதி தேர்வு-துணை தளபதி லெப் ஜென் நரவனே அவர்கள் தேர்வு

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் உலகின் பலம் வாய்ந்த இராணுவங்களளுள் ஒன்றான இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக பதவியேற்பார் என இராணுவ வட்டார அலுவலக செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனது 37 வருட இராணுவ சேவையில் லெப் ஜென் மனோஜ் அவர்கள் பல்வேறு இராணுவ கட்டளையகங்களை வழிநடத்தியுள்ளார்.காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதியில் பணியாற்றியுள்ளார்.

வருகிற டிசம்பர் 31ல் தற்போது தலைமை தளபதியாக பதவியற்று வரும் தளபதி ராவத் அவர்கள் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தளபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு முனையில் ஒரு இன்பான்ட்ரி பிரிகேடு, காஷ்மீரில் ராஷ்டீரிய ரைபிள்ஸ் பட்டாலியன் ,கிழக்கு கட்டளையக பிரிவு என பல பதவிகள் வகித்துள்ளார் லெப் ஜென் நரவனே அவர்கள்.

National Defence Academy மற்றும்  the Indian Military Academy ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளார் லெப் ஜென் நரவனே.ஜீன் 1980 சீக் லைட் இன்பான்ட்ரியில் இணைந்து தனது இராணுவ சேவையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.