புதிய ரோந்து போர்க்கப்பல் ஒன்றை மாலத்தீவுக்கு பரிசளித்த இந்தியா
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய “KAAMIYAAB” என்ற ரோந்துக் கப்பல் ஒன்றை Maldives National Defence Force (MNDF) க்கு இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளர்ந்து வரும் சீன அச்சுறுத்தலை இந்தியா சமாளிக்க இந்தப் பகுதி முழுமைக்கும் இந்திய கடற்படை தான் பாதுகாப்பு வழங்குகிறது.அதன் கீழ் தற்போது இந்த ரோந்து கப்பலை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியாவில் பயிற்சி பெற்ற எட்டு மாலத்தீவு வீரர்கள் இந்த கப்பலை இயக்குவர்.மாலத்தீவின் கடற்பகுதியை பாதுகாக்க, தனது சுற்றுலா சார் ஆர்வத்தை காக்க இந்த கப்பல் மாலத்தீவிற்கு பேருதவியாக இருக்கும்.மாலத்தீவிற்கு இந்தியா தான் தளவாடங்களை அளித்து,அதன் வீரர்களுக்கும் பயற்சி அளித்து வருகிறது.
இதுதவிர தெற்கு பகுதியில் உள்ள அட்டு அடோல் தீவில் மீன் பிளாண்ட் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ரூபே ஏடிஎம் கார்டுகளை மாலத்தீவில் அறிமுகப்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது தவிர 2500 LED தெருவிளக்குகளும் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.இவை மாலத்தீவின் தலைநகர் மாலேவின் தெருக்களை வெளிச்சமாக்கும்.