எல்லையில் பெரிதாய் நடக்கும் சண்டை : பயங்கரவாத கமாண்டர்கள்,பாக் வீரர்களை தாக்கும் இந்திய இராணுவம்
பாக்கின் சிறப்பு கமாண்டோ படையான Special Services Group (SSG) commandos உட்பட Lashkar-e-Toiba (LeT) மற்றும் Jaish-e-Mohammed (JeM) பயங்கரவாத கமாண்டர்கள் மற்றும் பாக் வீரர்கள் என 12 முதல் 19 பேரை இந்திய இராணுவம் கொன்றுள்ளது.
எல்லைக் கோட்டு பகுதியின் குப்வாரா செக்டாரில் தான் இந்த சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.குப்வாரா செக்டாரில் எதிர்ப்புறம் உள்ள பாக் பிரிகேடு தலைமையகமும் இந்திய தாக்குதலுக்கு உள்ளானது.பாக் பூஞ்ச் பகுதியில் இந்திய கிராமங்களை தாக்கி வருகிறது.
அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்றாலும் சண்டை எந்நேரத்திலும் பெரிதாக மாறலாம் என்ற இராணுவத் தளபதியின் கூற்றையும் , மறற தகவல்களையும் சேர்த்து பார்த்தால் பிரச்சனை புரியும்.
எல்லைப்புறத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய இராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த சண்டைகளில் மற்றும் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.இரு பாக் வீரர்கள் அதிகாரப்பூர்வமாக வீழ்த்தப்பட்டுள்ளனர்.