வயதான சிஆர்பிஎப் வீரர்களுக்கு இலகுரக பணிகள்;முன்னனி தாக்கும் படைகளில் இளம் வீரர்கள்: உள்துறை அமைச்சர்
3.25 லட்சம் வீரர்களுடன் சிஆர்பிஎப் நாட்டில் ஆகப் பெரிய மத்திய ஆயுதம் தாங்கிய படைப் பிரிவாக உள்ளது.
இந்த பிரிவின் தாக்கும் குழுவை இளமையாகவும் தேர்ந்ததாகவும் எப்போதும் வைத்திருக்க உள்துறை அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.நக்சல் எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு என சிஆர்பிஎப் அமைதிகாக்கும் பணிகளில் நாடுமுழுதும் ஈடுபட்டு வருகிறது.
நாட்டின் முன்னனி அமைதிகாக்கும் படையாக உள்ள சிஆர்பிஎப் தனது தாக்கும் சக்தியை இளவீரர்கள் உதவியுடன் தக்கவைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கென கட்-ஆப் வயது நிர்ணயிக்க ஆறு அதிகாரிகள் குழு ஒன்றை சிஆர்பிஎப் ஏற்படுத்தியுள்ளது.அந்த வயதிற்குள் மேல் உள்ள வீரர்களுக்கு இலகுரக பணிகள் மட்டுமே வழங்கப்படும்.
மவோயிச எதிர்ப்பு,பயங்கரவாத எதிர்ப்பு,காஷ்மீர்,வடகிழக்கு என நாட்டில் பல்வேறு மூலைகளில் பணி செய்யும் சிஆர்பிஎப் படை எப்போதும் சண்டையிட தகுதியான படையாக இருத்தில் அவசியம்.இதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.