மேஜர் ராஜிவ் குமார் ஜோன்

மேஜர் ராஜிவ் குமார் ஜோன்
சேவை எண்: IC -50443
பிறப்பு  : டிச 5 ,1969
இடம் : ரோடக், ஹர்யானா
சேவை : இராணுவம்
தரம் : மேஜர்
பிரிவு : 22 கிரானேடியர்
ரெஜிமென்ட்: கிரானேடியர்கள்
நடவடிக்கை : ரக்சக் நடவடிக்கை
விருதுகள்: அசோக சக்ரா,சௌரிய சக்ரா
வீரமரணம்: செப் 16, 1994
மேஜர் ராஜிவ் குமார் 5 டிசம்பர் 1969ல்  ஸ்ரீதர்மா சிங் மற்றும் ஸ்ரீமதிசாந்தி தேவி அவர்களின் புதல்வனாய் ஹரியானாவின் டோடக் மாவட்டத்தில் பிறந்தார்.11 வயதிலேயே தனது தந்தையை இழந்த ராஜிவ் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.நான்கு தங்கை மற்றும் ஒரு தம்பிகளை காக்கும் முழு பொறுப்பு சிறுவயதிலேயே அவர் மீது விழுந்தது.எனவே சிறுவயதிலேயே தேர்ந்த குணத்துடன் வீட்டு துன்பத்தை தாங்கினார்.
பள்ளி படிப்பை முடித்து தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்று ஜீன் 8, 1991ல் கிரானாடியர் ரெஜிமென்டின் 22வது பட்டாலியனில் இணைந்தார்.இணைந்த சிறு காலத்திலேயே தனது உயரதிகாரிகளால் மதிக்கப்பெற்றார்.
அனந்த்நாக் : 16 செப் 1994
 1994ம் ஆண்டு மேஜரின் 22வது கிரானேடியர் படைப் பிரிவு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிலை கொண்டிருந்தது.16 செப் அன்று மேஜரின் படைப்பிரிவுக்கு அனந்தநாக் மாவட்டத்தில் பகுதிகளில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்துமாறு ஆணை வந்தது.அங்கு ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக உளவுத்துறை இராணுவத்திற்கு தெரிவித்திருந்தது.கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டையின் போது ஒரு வீட்டில் கதவுகளுக்கிடேய இரு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை மேஜர் கண்டார்.பயங்கரவாதிகள் திடீரென நமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு வீரர் படுகாயம் அடைந்தார்.
மேஜரின் தலைமையில் வீரர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி மழை பொழிந்தனர்.மேஜர் வீரர்களை துப்பாக்கி சூடு நடத்தி பயங்கரவாதிகளை திசைதிருப்ப சொல்லினார்.அதே நேரத்தில் பயங்கரவாதிகள் தரைத்தளத்திற்கு இறங்கி தேடும் வீரர்கள் குழு மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.நிலையை உணர்ந்த மேஜர் தரைத்தளத்தில் வெளிப்பக்கமாக ஊர்ந்து சென்று ஒரு சிறிய துளை நோக்கி சென்றார்.அந்த துளைக்குள் இரு கிரேனேடுகளை வீசினார்.அது வெடித்ததில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட ஒரு பயங்கரவாதி தொடர்ந்து வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.
பிறகு மேஜர் அந்த ஓட்டை வழியாக உள்ளே சென்று பயங்கரவாதிக்கு நேர் எதிரே சென்று எழுந்து தாக்குதல் நடத்த தயாராகும் போது இருட்டை சாதகமாக வைத்து பயங்கரவாதி மேஜரை துப்பாக்கியால் சுட்டான்.இதில் மேஜர் படுகாயமடைந்தார்.ஆனால் விடவில்லை.அவனை பின்தொடர்ந்து தரைத்தளத்தில் கடுமையாக சுட அந்த பயங்கரவாதியும் கொல்லப்பட்டான்.நடவடிக்கை முடிந்த பிறகு அங்கிருந்து பெரிய அளவான தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன.ஆனால் படுகாயமடைந்த மேஜர் வீரமரணத்தை தழுவினார்.அவரது ஆகச்சிறந்த வீரம் மற்றும் உயர் தியாகம் காரணமாக அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
வீரவணக்கம் மேஜர்

Leave a Reply

Your email address will not be published.