முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி என்ற பொறுப்பை உருவாக்க பாதுகாப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முப்படைகளுக்கும் ஒரே தலைமை தளபதி என்ற பொறுப்பை உருவாக்க பாதுகாப்பு  மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet Committee on Security இன்று  Chief of Defence Staff (CDS) எனப்படும் புதிய தலைமை தளபதி பதவியை உருவாக்க அனுமதி வழங்கியுள்ளது.இந்த புதிய தலைமை தளபதி 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற தளபதியாக இருப்பார்.

இனி முப்படை விவகாரங்களில் ஒரே தலைமை தளபதி மட்டுமே அரசிற்கு அட்வைசராக விளங்குவார்.கார்கில் ரிவீவ் கமிட்டி 1999 தான் இந்த புதிய தளபதி பதவியை உருவாக்க கூறியிருந்தது.

முப்படை தளபதிகளின சம்பளம் தான் புதிய தலைமை தளபதிக்கும் வழங்கப்படும்.இராணுவ விவகார இலாகாவிற்கு புதிய தலைமை தளபதி தான் தலைமை வகிப்பார்.

தற்போது இராணுவத்தின் தலைமை தளபதியாக இருக்கும் தளபதி பிபின் ராவத் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அவர் இன்னும் இரு ஆண்டுகள் தலைமை தளபதியாக பணி செய்யும் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.