மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்கியது இந்திய கடற்படை

மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்கியது இந்திய கடற்படை

மியான்மர் தனது முதல் நீர்மூழ்கியை இந்தியாவிடம் இருந்து சில நாட்களுக்கு முன் பெற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற அந்த நீர்மூழ்கியை மியான்மர் நாட்டு கடற்படை தொடக்க விழாவான டிசம்பர் 24 அன்று நடைபெற  உள்ள விழாவின் போது படையில் இணைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 INS Sindhuvir ஒரு நவீன டீசல்-மின்னனு நீர்மூழ்கி ஆகும்.இந்திய கடற்படையில் 1988ல் இணைக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி 3000 டன்கள் எடையுடையது.

220கிமீ தூரம் செல்லக்கூடிய 3M-54 Kalibr cruise missiles ,Type-53 Torpedos, DM-1 mines உட்பட பல ரக ஆயுதங்களை இந்த நீர்மூழ்கியில் இணைக்க முடியும்.

ஆனால் இந்த நீர்மூழ்கியை பயிற்சிக்காக மட்டுமே உபயோகிக்க போவதாக மியான்மர் கடற்படை கூறியுள்ளது.

இது தவிர மேலும் சில கிலோ ரக நீர்மூழ்கிகளை இரஷ்யாவிடம் இருந்து வாங்க உள்ளதாக மியான்மர் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.