ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்கின்றன
வரும் வெள்ளி அன்று (27.12.19) ஈரான்,இரஷ்யா,சீனா இணைந்து இந்தியப் பெருங்கடலில் கடற்போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன.இந்திய பெருங்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.அமெரிக்கா-சீனா மற்றும் அமெரிக்கா-ஈரான் உறவு ஏற்கனவே மோசமாக நிலையில் இருக்கும் பட்சத்தில் சீனா,ஈரான் இணைந்து பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
சீனா க்சினிங் எனப்படும் வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட நாசகாரி கப்பலை பயிற்சிக்கு அனுப்ப உள்ளது.
இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த பயிற்சி இந்த வருட இறுதியில் நடைபெறும் என்ற தகவலை ஏற்கனடே ஈரான் நாட்டு கப்பல் படை அதிகாரி கூறியிருந்தார்.
பயிற்சி தொடர்பான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வந்த நிலையில் தற்போது பயிற்சி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட்டே பயிற்சி நடத்துவதாகவும் வேறு நோக்கம் இல்லை எனவும் சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் அவர்கள் அக்டோபர் 2 அன்று கூறும் போது விரைவில் சீனா மற்றும் இரஷ்யா பயங்கரவாத தடுப்பு மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு குறித்த போர்பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறியிருந்தார்.