கடற்படையின் ஆபரேசன் ட்ரைடன்ட் தயார் நிலையும், குக்ரி போர்க்கப்பல் நிலையும்

PNS ஹேங்கொர் ஒரு டாப்பின் வகை டீசல்-மின்சார நீர்மூழ்கி ஆகும்.இந்த நீர்மூழ்கி பிரான்சிடம் இருந்து 1969ல் பாகிஸ்தான் வாங்கி தனது கடற்படையில் இணைத்திருந்தது.
PNS ஹேங்கொர் 
15-22கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது.13 கிமீ/மணி வேகத்தில் 20,000கிமீ வரை கூட செல்லும் ஆற்றல் கொண்டது.30 நாட்கள் வரை கடலிலேயே இருக்க வல்லது.300மீ ஆழம் வரை நீருக்கடியில் செல்ல வல்லது.இதில் 12 டர்பிடோக்கள் (நீருக்கடியில் ஏவப்படும் ஏவுகணை போன்ற அமைப்பு)வைக்க முடியும்.
1971 நவம்பர் 25/26 நடு இரவில் ஹேங்கொர் தனது தளத்தில் இருந்து டர்பிடோக்களை நிரப்பிக் கொண்டு மும்பை துறைமுக கடற்பகுதியில் ரோந்து செல்லக் கிளம்பியது. ரோந்தின் போது அதன் கண்ணில் இரண்டு போர்க்கப்பல்கள் அகப்பட்டன.அவற்றை உளவு பார்த்துக் கொண்டு சில நாட்களை நீருக்குள் கழித்தது.
டிசம்பரம் 2/3ன் நடு இரவுப் பகுதிகளில் கடற்பரப்பில் உள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஹேங்கொர் நீர்மூழ்கியின் ரேடியோ சிக்னல்களை வழிமறித்து கேட்டன.ஹேங்கொர் இந்தியக் கடற்படையின் மேற்கு தலைமையகத்தின் கீழ் இயங்கும் போர்க்கப்பலின் நடமாட்டத்தை கண்காணித்து பாக் கடற்படை தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தது.
அப்போது தான்  இந்தியக் கடற்படை போர்க்கப்பல்கள் ஹேங்கொர் நீர்மூழ்கிக்கு மேலே சென்றன.இந்தியக் கப்பல்களால் கண்டுபிடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தனது அனைத்து ரேடியோ மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தியது.அப்போது தான் சரியாக நீர்மூழ்கியின் மேல் பகுதியில் இந்தியக் கடற்படையின் INS மைசூர் போர்க்கப்பல் கடந்து சென்றது.படைகள் கடந்து சென்றவுடன்  ஹேங்கொரின் கமாடோர் ( நீர்மூழ்கியின் தலைமை அதிகாரி) தஸ்னிம் உடனடியாக தனது தலைமையகத்திற்கு தகவல் அனுப்பினார்.ஆனால் இது நமது கடற்படையால் வெற்றிகரமாக இடைமறித்து கேட்கப்பட்டுவிட்டது.
INS Mysore
3 டிசம்பரில் ,இந்தியக் கடற்படை தனது நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களான INS குக்ரி மற்றும  INS கிர்பன் கப்பல்களை அனுப்பி வைத்தது.இவற்றிற்கு கேப்டன் M. N. முல்லா அவர்கள் தலைமை தாங்கினார்.
டிசம்பர் 4ல், இந்தியக் கப்பல்களை தாக்க ஹேங்கொர் நீர்மூழ்கிக்கு பாக் கடற்படை தலைமை அனுமதி அளித்தது.இதற்காக இரகசிய குறியீடுகள் நீர்மூழ்கிக்கு அனுப்பப்பட்டன.அதே டிசம்பர் 4ல் இந்தியக் கடற்படை பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவது பாக்கிற்கு தெரியவில்லை.
INS குக்ரி

கேப்டன் M. N. முல்லா

இந்திய கடற்படை வரலாற்றின்,அதன் திறனின்,அதன் திறமையின் மணிமகுடமாக விளங்குவது அந்த நடவடிக்கை தான்.இந்தியா தனது கடற்படை தினமாக அந்த நாளை அறிவித்தது என்றால் அந்த நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என புரிந்து கொள்ளுங்கள்.
ட்ரைடென்ட் நடவடிக்கை
ட்ரைடென்ட் நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் மீது இந்தியக் கடற்படை தொடுத்த ஒரு மாபெரும் தாக்குதல் ஆகும்.இந்த ட்ரைடென்ட் நடவடிக்கையின் போது தான் முதன் முதலாக நமது ஆசியப் பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. டிசம்பர் 4-5ன் இரவில் இந்த ஆபரேசன் நடத்தப்பட்டது.கராச்சி துறைமுகத்தில் இருந்த கப்பல்கள் மற்றும் பல பொருள்கள் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டது.இந்தியக் கப்பல்களுக்கு ஒரு சிறு கீரல் கூட  விழவில்லை.ஒரு கண்ணிவாரிக் கப்பல்,ஒரு நாசகாரிக் கப்பல்,ஆயுதங்கள் ஏற்றி நின்ற ஒரு கப்பல்,எண்ணெய் சேமிப்பு டேங்குகள் ஆகியவற்றை பாக் இழந்தது.மற்றுமொரு நாசகாரிக் கப்பல் பழுது நீக்கம் செய்ய இயலாதபடி சேதமடைந்தது.இந்த வெற்றி தினத்தை கொண்டாட தான் டிசம்பர் 4 கடற்படை தினமாக அறிவிக்கப்பட்டு வருடம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்திய இராணுவச் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.