Breaking News

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக ஜப்பான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய இராணுவம்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக ஜப்பான் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய இராணுவம்

அடுத்த வருடம் ஜீலை 24 முதல் ஆகஸ்டு 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு/தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் நாட்டு வீரர்களுக்கு இந்திய வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றன.பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய இராணுவம் அளவில்லா அனுபவச் செல்வங்களை பெற்றுள்ளது.

இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்களும் ஜப்பான் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த அக்டோபரில் தர்மா கார்டியன் போர்பயிற்சியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா-ஜப்பான் இராணுவ வீரர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என உலகின் பல உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கவனிக்க தக்கது.

காஷ்மீர்,வடகிழக்கு மற்றும் வெளிநாடுகளிலும் பயங்கரவாத தடுப்பு/எதிர்ப்பு நடவடிக்கைகளில் நாள்தோறும் இந்திய இராணுவம் ஈடுபட்டு வருகிறது.பாரா வீரர்கள் காடுசார் போர்முறைகளில் வல்லுநர்கள்.

இதற்காகவே உலகின் பல நாடுகள் இந்தியாவுடன் போர்பயிற்சி மேற்கொள்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.